விஷால் பேச்ச கேட்டு என் படம் நின்னு போச்சு, வாடகை கூட கொடுக்க முடியல – வேதனையில் லிவிங்ஸ்டன் பேட்டி

0
1107
- Advertisement -

விஷால் பேச்சால் என் படமே நின்னு போச்சு என்று நடிகர் லிவிங்ஸ்டன் அளித்து இருக்கும் பேட்டி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, அபிநயா, ரிது வர்மா, நிழல்கள் ரவி, Y.G. மகேந்திரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷாலின் இந்த படம் வெற்றியைத் தந்திருக்கிறது. இதை அடுத்து இந்த படத்தினுடைய வெற்றி விழா சென்னையில் நடைபெற்றிருந்தது. இதில் விஷால், சிறு பட்ஜெட் படங்களை எடுத்தால் உங்களுக்குச் சல்லிக்காசுகூட திரும்பக் கிடைக்காது. ஏற்கெனவே, 120 சிறு பட்ஜெட் படங்கள் வெளியிட முடியாமல் காத்துக்கிடக்கின்றது. தயவு செய்து இன்னும் இரண்டு வருடங்களுக்கு வந்துவிடாதீர்கள்.

- Advertisement -

விஷால் சொன்ன சர்ச்சை கருத்து:

வேறு எதிலாவது முதலீடு செய்யுங்கள் என்று பேசி இருந்தது இணையத்தில் சர்ச்சையை கிளப்பி இருந்தது. இதற்கு பலருமே கண்டனம் தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் விஷால் குறித்து நடிகர் லிவிங்ஸ்டன் அளித்து இருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதில் லிவிங்ஸ்டன் , சமீபத்தில் விஷால் சின்ன படங்களை எடுப்பவர்கள் வராதீர்கள். நிறைய நஷ்டம் தான் வரும். அந்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் போடுங்கள். நிறைய சின்ன பட்ஜெட் படங்கள் கிடைக்கிறது என்று சொன்னவுடன் நிறைய தயாரிப்பாளர்கள் பின் வாங்கி விட்டார்கள்.

லிவிங்ஸ்டன் அளித்த பேட்டி:

இதனால் என்னுடைய படமும் நின்று போச்சு. ஒன்றறை கோடி ரூபாயில் ஒரு சின்ன பட்ஜெட் படத்தை எடுக்க இருந்தேன். அதற்காக இரண்டு தயாரிப்பாளர்களிடம் பேசி இருந்தேன். விஷால் பேச்சைக் கேட்டு ஒருவர் பின்வாங்கி விட்டார். இதனால் நான் ரொம்பவே பாதிக்கப்பட்டேன். நான் மட்டும் இல்லை இது போல பல இயக்குனர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நிறைய தயாரிப்பாளர்கள் பயந்து பின்வாங்கி இருக்கிறார்கள். எல்லாருமே ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறோம். வாடகை கொடுக்க முடியாமல் கூட இருக்கிறோம். எங்களை தயாரிப்பாளர்கள் தான் காப்பாற்றிக் கொண்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

சின்ன பட்ஜெட் படங்கள் குறித்து சொன்னது:

இந்த மாதிரி விஷால் கொடுத்த ஸ்டேட்மெண்டால் எல்லோருமே பின்வாங்கி இருக்கிறார்கள். பெரிய நடிகர்களுக்கு தான் மக்கள் தியேட்டர்களில் வருகிறார்கள் என்று சொல்வதெல்லாம் சும்மா. அருவி படத்தில் நடித்தவர் பெரிய நடிகரா? அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. சமீபத்தில் வந்த லவ் டுடே படத்தை அந்த இயக்குனரே இயக்கி நடித்து இருந்தார். நல்ல கதை இருந்தால் மக்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். என்னுடைய விரலுக்கேத்த வீக்கம் படம் ரிலீஸ் ஆன கொஞ்ச நாட்களில் தான் படையப்பா படம் வந்தது. ஆனால், படையப்பா படத்தை விட விரலுக்கேத்த வீக்கம் படம் வசூல் அதிகமாக செய்ததாக தயாரிப்பாளர் சொல்லி இருந்தார்.

புது படம் குறித்து சொன்னது:

இப்படி கதைக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். கதை நன்றாக இருந்தால் கண்டிப்பாக ஓடும். முடக்கில் கிடக்கும் படங்கள் எல்லாம் கதை நன்றாக இருக்காது. இதனால நிறைய உதவி இயக்குனர்கள், புதுமுக நடிகர்களெல்லாம் பாதிப்பு தான். இவர்கள் எல்லாம் சின்ன பட்ஜெட் படங்களில்தான் பயணிப்பார்கள். சொல்லப் போனால் விமல், ஜெய் போன்ற நடிகர்களுக்கே பிரச்சனை தான். இவர்கள் எல்லாம் சின்ன பட்ஜெட் படங்களில்தான் நடிக்கிறார்கள். இப்ப நான் புது முகங்கள் வச்சு தான் ஒரு படம் பண்ண போகிறேன். கதை எல்லாம் ரெடியாக இருக்கிறது. கண்டிப்பாக என் கதை மக்களுக்கு பிடிக்கும். என் கதையின் மேல் நம்பிக்கை இருக்கிறது. விஷால் பேச்சைக் கேட்டு தயாரிப்பாளர் பின் வாங்கி விட்டார். நான் என்னுடைய ஒரு நிலத்தை விற்று படத்தை எடுக்கப் போகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement