ஆண் நண்பருடன் ராங் ரூட்டில் சென்று விபத்து, படுகாயம் அடைந்த போலீசார் – சர்ச்சையில் சிக்கிய எதிர் நீச்சல் சீரியல் நடிகை.

0
558
- Advertisement -

குடிபோதையில் தன் நண்பர்களுடன் கார் ஓட்டி சென்று எதிர்நீச்சல் மதுமிதா விபத்தை ஏற்படுத்தியிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-

அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை. மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இவர்கள் இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக கருதி வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. இதனால் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். தற்போது சீரியலில் தர்ஷினியை மர்ம நபர்கள் கடத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால், தர்ஷினியை கடத்தியது ஈஸ்வரி தான் என்று அவரை கைது செய்து இருக்கிறார்கள்.

மதுமிதா குறித்த தகவல்:

இன்னொரு பக்கம் தர்ஷினி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க சக்தி -ஜனனி இருவரும் முயற்சி செய்கிறார்கள். இனிவரும் நாட்களில் தர்ஷினியை ஜனனி கண்டுபிடிப்பாரா? தர்ஷனியை கடத்தி வைத்தது யார்? ஈஸ்வரி விடுதலை ஆகுவாரா? போன்ற பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மதுமிதா. இவர் கன்னட சின்னத்திரை சீரியல் நடிகை ஆவார். இருந்தாலும், தற்போது இவர் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

மதுமிதா கார் விபத்து:

இவர் ஏற்கனவே கன்னடம், தெலுங்கு சின்னத்திரை சீரியல்களின் நடித்திருக்கிறார். ஆனால், எதிர்நீச்சல் சீரியலின் மூலம் தான் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் மதுமிதா அழகாக தமிழ் பேசி வருகிறார். இந்த நிலையில் குடிபோதையில் கார் ஓட்டி நடிகை மதுமிதா விபத்து ஏற்படுத்தியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சோழிங்கநல்லூரில் பகுதியில் இருக்கும் ஒரு இடத்தில் தான் இந்த விபத்து ஏற்படுத்தி இருக்கிறது. அங்கிருக்கும் ஒரு வழி பாதையில் தன்னுடைய ஆண் நண்பருடன் மதுமிதா ராங் ரூட்டில் சென்று கொண்டிருந்தார்.

போலீஸ் விசாரணை:

அப்போது எதிரே வந்த போலீஸ் வாகனத்தின் மீது மதுமிதா கார் மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விட்டார்கள். பின் அடிபட்ட போலீசை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். இந்த விபத்து குறித்து மதுமிதாவையும் அவருடைய நண்பரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து போய் விசாரித்து இருக்கிறார்கள். அப்போது மதுமிதா, ராங் ரூட்டில் வந்த எங்கள் மீது தப்பில்லை. எதிரே வந்த போலீஸ் தான் வேகமாக வந்து காரின் மீது மோதினார் என்று கூறியிருக்கிறார். இந்த விபத்து நடந்து இரண்டுநாட்களுக்கு மேல் ஆகி இருக்கிறது. தற்போது இந்த தகவல் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வந்து கொண்டிருக்கின்றது

Advertisement