அர்ஜுன் தாஸ் கைதிலயே செத்துட்டாரே, அப்புறம் எப்படி விக்ரம்ல வந்தார் ? ரசிகர் கேள்விக்கு லோகேஷ் சொன்ன லாஜிக்கான பதில்.

0
386
arjundas
- Advertisement -

கைதி படத்தில் இறந்த அன்பு எப்படி விக்ரம் படத்தில் வந்தார் என்ற ரசிகர்கரின் கேள்விக்கு பதில் கொடுத்து இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. விக்ரம் படம் வெளிவந்து எல்லா இடங்களிலும் முதல் நாளே நல்ல வசூல் வேட்டை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. பிரபலங்கள் பலரும் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.

இதையும் பாருங்க : கெட்டிமேள சத்தத்தில் கோலாகலமாக நடந்து முடிந்த விக்கி – நயன் திருமணம். ஆஜரான இரண்டு சூப்பர் ஸ்டார்கள். இதோ புகைப்படம்.

- Advertisement -

பரிசுகளை அள்ளிக்கொடுத்த கமல் :

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகார்ஜுக்கு 80 லட்சம் மதிப்பில் கார் ஒன்றை பரிசளித்தார் கமல். அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜுன் 13 உதவி இயக்குனர்களுக்கு அப்பாச்சி பைக்கும் சூர்யாவிற்கு 40 லட்சம் பாதிப்புள்ள ஒரு rolex கைக்கடிகாராத்தையும் பரிசாக கொடுத்துள்ளார் கமல். விக்ரம் படம் ஒரு மல்டி யுனிவர்ஸ் படம் போல தான் அமைந்து இருக்கிறது.

கைதி மற்றும் விக்ரமில் அன்பு :

கமல் நடிப்பில் வெளியான ஒரிஜினல் விக்ரம் படம் துவங்கி கைதி வரை பல படங்களின் தொடர்ச்சியாகவே தான் இந்த படத்தை இயக்கி இருக்கிறார் லோகேஷ். சொல்லப்போனால் கைதி படத்தின் ஒரு தொடர்ச்சியாகவே தான் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் கைதி படத்தில் வந்த அடைக்கலம், அன்பு போன்ற பல கதாபாத்திரங்கள் வந்து சென்று இருக்கிறது. கைதி படத்தில் மெய்ன் வில்லன் அடைக்கலத்தை விட அதிகம் பிரபலமானது அன்பு கதாபாத்திரம் தான்.

-விளம்பரம்-

ரசிகர் கேட்ட சந்தேகம் :

இந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் அர்ஜுன் தான். கைதி படத்தின் ஒரு காட்சியில் இவரை போலீசாக இருக்கும் ஜார்ஜ் மரியன், தீயணைக்கும் சிலிண்டரை கொண்டு அடித்து கொன்றுவிடுவது போல தான் காண்பிக்கப்பட்டு இருக்கும். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார் லோகேஷ் கனகராஜ்.

கைதி 2 அறிவிப்போடு லோகேஷ் சொன்ன பதில் :

அப்போது இது குறித்து ரசிகர் ஒருவர் கேட்டு இருக்கிறார். இதற்கு பதில் அளித்த லோகேஷ் ‘கைதியில் நெப்போலியன் அடிதத்ததில் அன்புவின் தொண்டையில் மட்டும் தான் காயம் ஏற்பட்டு இருக்கும். அதனால் தான் அந்த தையல் காயம் விக்ரமில் இருக்கும். இதுகுறித்து கைதி 2வின் விவரிக்கப்படும் என்று கூறியுள்ளார். அவர் சொன்னதை போலவே தான் விக்ரம் படத்தில் அர்ஜுன் தாஸ் கழுத்தில் தையல் காயம் இருக்கும். மேலும், லோகேஷ்ஷின் இந்த பதிலுடன் கைதி 2 குறித்தும் சத்தமில்லாமல் அறிவித்து இருக்கிறார்.

Advertisement