இதே கேள்வியை அவகிட்ட கேட்டிருந்த அவ செருப்பக் கழற்றி அடிங்கன்னு சொல்லியிருப்பா- ஆண்ட்ரியா அளித்த நச் பதில்.

0
4692
andrea

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. நடிகை மட்டுமல்லாமல் இவர் சிறந்த பாடகியும் ஆவர். ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்த ஆண்ட்ரியா ‘வடசென்னை’ ‘தரமணி’ போன்ற படங்களில் தனது வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார். அதிலும் வட சென்னை படத்தில் ஆடையில்லாமல் இவர் நடித்த காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது லாக்டவுனில் இருக்கும் ஆண்ட்ரியா, சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று இருந்தார். அதில், லாக் டவுனால் நாள் சமையலில் சிறந்து விளங்கி விட்டேன். முன்பு ஒரு காபி கூட வைக்க தெரியாது, இப்போ ஒரு சீனியர் செப் மாஸ்டர் போல ஆகிட்டேன். நானே கடைக்கு போறது, மளிகை கடைக்கு சென்று நானே மளிகை பொருட்கள் வாங்குவது என்று மாறிவிட்டேன் என்று கூறியுள்ளார். மேலும், `லாக்டெளன் சூழல்ல பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகள் அதிகமாகிவிட்டதாக வரும் செய்திகள் குறித்து கேட்டகப்பட்டது.

- Advertisement -

அதற்கு பதில் அளித்த ஆண்ட்ரியா, இதே கேள்வியை ‘‘தரமணி’ ஆல்தியாகிட்ட கேட்டிருந்தா கண்டிப்பா அவ செருப்பக் கழற்றி அடிங்கன்னு சொல்லியிருப்பா. ஆண்ட்ரியாவுக்கு அவ்வளவு தைரியம் கிடையாது. கொரோனா பயத்தைவிட இந்த சூழலில் வீட்டுக்குள்ள பெண்கள், குழந்தைகள் எதிர்கொள்கிற உடல், மனரீதியான பிரச்னைகள் அதிகமாகியிருக்குங்கற செய்தி நிஜமாவே வருத்தமா இருக்கிறது.

இந்தப் போராட்டத்தைப் பெண்கள் தைரியமா எதிர்கொள்ளணும். இதைப்பத்தித் தயங்காம வெளிய சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் ஆன்ட்ரியா. ஏற்கனவே நடிகை ஆண்ட்ரியா, தன்னை ஒரு அரசியல் பிரபல உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கஷ்டப்படுத்தினார் என்றும் அவருடைய பெயரை தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்ட்டுள்ளதாகவும் கூறினார். ஆனால், அந்த புத்தகம் வெளியாகவே இல்லை.

-விளம்பரம்-
Advertisement