சிவாஜி குடும்பத்தில் இருந்து நடிக்கவரும் அடுத்த வாரிசு – அதுவும் இந்த தேசிய இயக்குனர் படம் மூலம்.

0
988
sivaji
- Advertisement -

பொதுவாகவே சினிமா துறையில் இருக்கும் பல நடிகர்கள் வாரிசு நடிகர்கள் தான். சினிமா துறையில் மிகப் பிரபலமான நடிகர்கள் தங்களுடைய வாரிசுகளை அடுத்து அடுத்து சினிமாவில் நடிக்க வைத்து வருவது தொன்று தொட்டு காலத்தில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. இது தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் பிற மொழி சினிமாக்களிலும் நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் பிரபல நடிகர் குடும்பத்திலிருந்து வாரிசு நடிகர் ஒருவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

தமிழ் சினிமா என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் தன் நடிப்பின் மூலம் மக்களை வியப்பிலும் ஆச்சர்யத்திலும் அடைய செய்தவர் சிவாஜி கணேசன். இன்றும் இவருடைய நடிப்புக்கு யாருமே நிகர் இல்லை என்றுதான் சொல்லணும். அந்தளவிற்கு தன்னுடைய நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தவர் சிவாஜி கணேசன். இவருடைய மகன் பிரபு. இவர் தன் தந்தையைப் போல் இல்லை என்றாலும் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

இதையும் பாருங்க : வனவிலங்குகளின் தாக்குதலை எதிர்கொள்ளும் வெற்றிமாறன் படக்குழு – எச்சரிக்கையாக என்னென்ன செஞ்சி இருக்காங்க பாருங்க

- Advertisement -

தமிழ் சினிமாவில் சிவாஜியின் வாரிசுகள் :

இவரை தொடர்ந்து இவருடைய மகன் விக்ரம் பிரபு.தற்போது விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இப்படி சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒருவர் சினிமாவில் நடிக்க வந்து கொண்டிருக்கிறார்கள். சிவாஜிகணேசனின் மகன், மூத்த மகன், அவருடைய பேரன் என்று வழிவழியாக அவருடைய வம்சங்கள் சினிமாவில் நடித்து வருகிறது.

அடுத்த வாரிசு நடிகர் :

இந்நிலையில் சிவாஜி கணேசனின் குடும்பத்திலிருந்து அடுத்த வாரிசான தர்ஷன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது. அந்த வாரிசு நடிகர் நடிக்கும் படத்தை பிரபல தேசிய விருது வாங்கிய இயக்குனர் சீனு ராமசாமி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.இது முழுக்க முழுக்க கிராமத்து கதையை மையமாக வைத்து உருவாகி வரும் படம் என்று கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

சிவாஜி பேரன் தர்ஷன் :

தற்போது சிவாஜி கணேசனின் குடும்பத்திலிருந்து திரையுலகிற்கு அறிமுகமாக போகும் நபரின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்து இவர் ஹாலிவுட் நடிகர் போல் ஸ்டைலாக இருக்கிறார் என்று கமெண்ட்களை போட்டு வருகிறார்கள். விக்ரம் பிரபு போல இவரும் தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை பெறுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement