நின்னுட்டு தான் தூங்க முடியும், மனைவி விட்டு போய்ட்டா, சந்தானம் தான் பாத்துக்குறார் – லொள்ளு சபா நடிகரின் பரிதாப நிலை.

0
488
- Advertisement -

லொள்ளு சபா ஆண்டனி குறித்து பலரும் அறிந்திடாத தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சி 2003 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இது முழுக்க முழுக்க நகைச்சுவை நிகழ்ச்சி. இதில் சந்தானம், ஜீவா, லொள்ளுசபா மனோகர், பாலாஜி, சுவாமிநாதன், ஜாங்கிரி மதுமிதா, மனோகர் உட்பட பல முன்னணி நடிகர்கள் போட்டியாளர்களாக கலந்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் பல பேர் தற்போது சினிமாவுலகில் பிரபலமான நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கின்றது. இப்போதும் இந்த லொள்ளு சபா நிகழ்ச்சியின் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் ஆண்டனி. இந்த நிகழ்ச்சியில் இவருடைய காமெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

- Advertisement -

லொள்ளு சபா ஆண்டனி:

இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அதன் மூலம் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்திருந்தது. இருந்தாலும் இவரால் பிரபல நடிகராக முடியவில்லை. மேலும், கடந்த ஆண்டு லொள்ளு சபா நிகழ்ச்சியின் ரீயூனியன் நடந்தது. அதில் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். ஆனால், ஆண்டனி கலந்து கொள்ளவில்லை. இது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினார்கள்.

ஆண்டனி பேட்டி:

ஆண்டனி குறித்து எந்த தகவலும் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் youtube சேனல் ஒன்று லொள்ளுசபா ஆண்டியை பேட்டி எடுத்து இருக்கிறது. அதில் அவர், எனக்கு லொள்ளு சபா நிகழ்ச்சி தான் வாய்ப்பை கொடுத்தது. அதன் மூலம் சினிமாவில் எப்படியாவது பிரபலமாகலாம் என்று போராடினேன். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இப்படி இருக்கும் நிலையில் தான் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. முதலில் நெஞ்சு சளி ஏற்பட்டு ஆஸ்துமா பிரச்சனை வந்தது.

-விளம்பரம்-

உடல் ப்ரச்சனை குறித்து சொன்னது:

அதற்குப் பிறகு இடுப்புக்கு கீழ் முழுவதும் நீர் கோத்து நடக்க முடியாமல் போனது. என்னால் சாதாரண மனிதர்கள் போல் படுத்து தூங்க முடியாது. படுத்தால் மூச்சு திணறல் ஏற்படும். இதனால் சிறிது நேரம் உட்கார்ந்து, சிறிது நேரம் நின்று கொண்டு தான் தூங்குவேன். இப்போது என்னுடைய மனைவி, குழந்தைகள் என்னுடன் இல்லை. நான் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று இருந்ததால் என் மனைவி ஒரு கட்டத்தில் வெறுத்து போய், நீ எப்ப தான் வெற்றி அடைவாய்? இனி உன்னுடன் வாழ முடியாது என்று சென்று விட்டார்.

சந்தானம் குறித்து சொன்னது:

இதனால் நாங்கள் பிரிந்து தான் இருக்கிறோம். என்னை இப்போது பார்த்துக் கொள்வதற்கு யாரும் இல்லை. என் மனைவியும் வருவதில்லை. சந்தானம் பேச்சை நான் கேட்கவில்லை. என்னுடைய தீய நண்பர்களால் என்னுடைய பணம், வீடு எல்லாமே என்னை விட்டு சென்றது. ஆனால், நான் கஷ்டப்படும் நேரத்தில் அவர்கள் உதவவில்லை. சந்தானம் தான் உதவுகிறார். சேசு அப்பா கூட நான் இருக்கிறேன் டா, பயப்படாதே என்று சொன்னார். அவர் இறந்தது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று மன வேதனையில் ஆண்டனி கூறியிருக்கிறார்.

Advertisement