பெயர் கொழப்பதால் கொரோனாவால் லொள்ளு சபா நடிகர் காலமானதாக வந்த செய்தி – அதிர்ச்சியடைந்து அவரே சொன்ன விளக்கம்.

0
1016
maaran
- Advertisement -

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை.தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்தனர்.

-விளம்பரம்-

சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி ஆகியோர் கொரோனாவால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.அதே போல நேற்று பிரபல காமெடி நடிகரான நெல்லை சிவா மாரடைப்பு காரணமாக காலமானார். இப்படி ஒரு நிலையில், தற்போது கில்லி பட நடிகர் மாறனும் மரணமடைந்திருப்பது திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பாருங்க : திருமணத்திற்கு பின் ஏறிய உடல் – மீண்டும் ஸ்லிம் லுக்கிற்கு மாறிய பிரியா மணி. என்ன ஒரு Transformation.

- Advertisement -

2004-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் ஆதிவாசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர், இதையடுத்து டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். மேலும் கானா பாடல்களையும், மேடை கச்சேரிகளிலும் பாடி வந்துள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நடிகர் மாறன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இப்படி ஒரு நிலையில் லொள்ளு சபா புகழ் நடிகர் மாறன் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானதை பார்த்து அவரே ஷாக்காகியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், அட அது நான் இல்லப்பா… அதுவேற மாறன்.. நான் ரொம்ப நல்லா இருக்கேன்.. இப்போதான் படங்களில் பிஸியாக இருக்கேன். மறைந்த கில்லி பட நடிகரின் பேரும் மாறன் என்பதால் இவர் காலமானதாக மாறனின் புகைப்படம் இணைந்து சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.

-விளம்பரம்-
Advertisement