இது வீடா இல்ல அரண்மனையா, சந்திரமுகி பேலசுகுக்கே டப் கொடுக்குதே – வீட்டை சுற்றிக்காண்பித்த லொள்ளு சபா ஜீவா

0
1101
Jeeva
- Advertisement -

லொள்ளு சபா ஜீவாவின் ஹோம் டூர் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் பல்வேறு நபர்கள் தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர், நடிகைகளாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் காமெடி நடிகர் சந்தானம் தொடங்கி யோகி பாபு வரை லொள்ளு சபா நிகழ்ச்சி மூலமே சினிமாவில் நுழைந்தனர்.

-விளம்பரம்-

இவர்களில் காமெடி நடிகரான ஜீவாவும் ஒருவர். இவர் லொள்ளு சபா நிகழ்ச்சிக்கு பின்னர் பல்வேறு திரைப்படங்களில் காமெடியனாக நடித்து இருக்கிறார். அதில் குறிப்பாக, விஜய் நடித்த குருவி, ஆர்யா நடிப்பில் வெளியாகியிருந்த மதராஸ் பட்டினம், சுந்தர் சி நடிப்பில் வெளியாகியிருந்த முரட்டுக்காளை உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். பின் சினிமா வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை என்ற உடன் இவர் கலர்ஸ் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான எங்க வீட்டு மீனாட்சி என்ற தொடரில் நடித்திருந்தார்.

- Advertisement -

ஜீவாவின் ஹோம் டூர் வீடியோ:

இந்த நிலையில் லொள்ளு சபா ஜீவா நடித்த எங்க வீட்டு மீனாட்சி தொடருக்காக போடப்பட்ட காரைக்குடி வீட்டின் பிரம்மாண்ட செட்டின் Home Tour வீடியோ வைரலாகி வருகிறது. . ஜீவா காரைக்குடியை பூர்வீகமாக கொண்டவர். காரைக்குடியில் உள்ள இவருடைய பூர்வீக வீட்டை தான் இவர் வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவில் ஜீவா நடித்த எங்க வீட்டு மீனாட்சி தொடருக்காக போடப்பட்ட வீட்டின் Home Tour வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வீடு குறித்து சொன்னது:

அந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையும் சின்ன வீட்டுக்கு இணையாக இருக்கிறது. விசாலமான நடைபாதை, காற்றோட்டமான பெரிய பெரிய அறைகள் என அரண்மனைகளுக்கு சவால் விடும் அளவிற்கு இந்த வீடு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு தெருவில் தொடங்கி அடுத்த தெருவில் தான் இவருடைய வீடு முடிவடையும் போலிருக்கிறது. இந்த வீட்டின் மெயின் ஹாலில் அவருடைய முன்னோர்களின் புகைப்படங்கள் இருக்கின்றது.

-விளம்பரம்-

வீடியோவில் ஜீவா சொன்னது:

பாரம்பரிய பொருட்களும் ஆங்காங்கே இருக்கிறது. இந்த வீட்டினுடைய மதிப்பு இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. மேலும், வீடியோவில் ஜீவா கூறியது, காரைக்குடியில் எங்களுடைய குடும்பம் பெரிய தலக்கட்டு. இங்கே பெரும்பாலான வீடுகள் இப்படித்தான் இருக்கும். திருட வந்தால் கூட ஒரு மாதம் உட்கார்ந்து சமைத்து சாப்பிட்டு விட்டு திருடலாம் என்று காமெடியாக கூறியிருக்கிறார்.

Advertisement