அப்பா அப்பா என்று சொல்லிவிட்டு சேரனை கேவலப்படுத்திய லாஸ்லியா.! நேத்து இத கவனிசீங்களா.!

0
8125
losliya

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் லாஸ்லியா தான். ரசிகர்களையும் தாண்டி சக போட்டியாளர்களுக்கும் இவர் செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறார். லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே சமூக வலைதளத்தில் இவருக்கு பல்வேறு ஆர்மிக்களை ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர்.

லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் இருந்தாலும், அழகா இருப்பதால் மட்டும் லாஸ்லியாவை ஆதரிக்க முடியாது, லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் எந்த செயல்பாட்டிலும் கலந்து கொள்வதே இல்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர். இதனால் லாஸ்லியா ஆர்மிக்கு இணையாக ஹேட்டர்ஸ்களும் இருந்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : 10 கோடி கொடுத்ததும் நடிக்க மறுத்துள்ள நயன்தாரா.! யார் அந்த நடிகர் தெரியுமா.!

- Advertisement -

அதிலும் கடந்த இரண்டு நாடளுக்கு முன்பு முகேன், லாஸ்லியவை வடிவேலுவுடன் ஒப்பிட்டு பேசியது லாஸ்லியாவிற்கு பிடிக்கவில்லை. இதனால் லாஸ்லியா மற்றவர்களிடம் எல்லாம் தன்னை ஒப்பிட்டு மட்டம் தட்ட வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தார் இதனால் வடிவேலுவின் ரசிகர்கள் பலரும் லாஸ்லியாவை கழுவி ஊற்றிவருன்றனர்.

இந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் மதுமிதா, ரேஷ்மாவிற்கு டாஸ்க் ஒன்றை கொடுத்தார், அதில் ‘இன்னிக்கி செத்த நாளைக்கு பாலு இந்த ஏரியாவிலேயே நீ தான் Foolu’ என்று சொன்னால் தான் சாப்பாடு என்று ககூறியிருந்தார். இதனால் சேரனிடம், ரேஷ்மா மற்றும் இருவரும் சென்றனர்.

-விளம்பரம்-

ஆனால், ரேஷ்மாவிற்கு சேரன் மீதிருந்த தனிப்பட்ட விரோதத்தால் சேரனை மரியாதையை குறைவாக ‘ இன்னிக்கி செத்த நாளைக்கு பாலு இந்த ஏரியாவிலேயே நீ தான் டா Foolu டா’ என்று குறிப்பிட்டிருந்தார் ரேஷ்மா. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெனில் இதுநாள் வரை சேரனை ‘அப்பா அப்பா ‘ என்று கூறிவந்த லாஸ்லியாவும் சேரனை ரேஷ்மா மரியாதையை குறைவாக பேசியபோதும் சிரித்துக்கொண்டு தான் இருந்தார்.

இது சேரனுக்கு மிகவும் வருத்தமாக தான் இருந்திருக்கும். தன்னை யாராவது மட்டமாக பேசினால் மட்டும் கோபப்படும் லாஸ்லியா, தன்னை மகளாக என்னும் சேரனை, ரேஷ்மா அவமரியாதையாக பேசியதை பார்த்து ஏளனமாக சிரித்தது அவரது முதிர்வில்லா அறிவையே வெளிச்சம் போட்டு காட்டியது.

Advertisement