லவ் டுடே படத்தின் 100வந்து – Cult classic என்று குறிப்பிட்டு தயாரிப்பாளர் போட்ட பதிவு – வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
570
LoveToday
- Advertisement -

தீப் ரங்கநாதன் குறித்து யூடியூப்பர் கேட்ட கேள்விக்கு லவ் டுடே படத்தின் தயாரிப்பாளர் அளித்து இருக்கும் பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், இவர் முதலில் குறும்படம் தான் எடுத்து இருந்தார். அதன் பின் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் “கோமாளி” படம் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்து இருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் ரீதிகா மோகன், கே. எஸ். ரவிக்குமார், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். படத்தில் 16 ஆண்டுகள் கோமாவில் இருந்த 90s இளைஞன் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட நவீன மாற்றங்களை வியப்புடன் பார்ப்பதை வேடிக்கையாக சொல்லி இருந்தார் இயக்குனர்.

- Advertisement -

கோமாளி படம்:

இந்த கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதோடு, வசூலிலும் நல்ல வேட்டை ஈட்டி இருந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் பிரதீப் ரங்கநாதன்நடித்து இருந்தார் . இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.

லவ் டுடே படம்:

இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள்நடித்து இருந்தண்ட் . காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகிஇருந்தது . படத்தில் சத்யராஜின் மகளாக இவானா நடித்திருக்கிறார். இவானா- பிரதீப் ரங்கநாதன் இருவரும் காதலிக்கிறார்கள். இதை இரு வீட்டிலும் சொல்ல நினைக்கிறார்கள். அப்போது இவானாவின் அப்பா சத்யராஜ் இருவருக்கும் ஒரு நிபந்தனையை வைக்கிறார். அதாவது, நீங்கள் இருவரும் உண்மை காதலர்கள் என்றால் ஒரே ஒரு நாள் மட்டும் உங்களுடைய செல்போன்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

பின் இருவரும் அந்த நிபந்தனையை ஒற்றுக் கொண்டு செல்போன்களை மாற்றிக் கொள்கிறார்கள். அந்த ஒரு நாள் கதை தான் படத்திற்கு முக்கிய திருப்பமாக அமைகிறது. இதனால் இருவருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதையெல்லாம் சமாளித்து இந்த காதலில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. பல சுவாரசியமான சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது.

மேலும், விமர்சன ரீதியாக லவ் டுடே படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புபெற்று இருந்தது. என்னதான் இந்த படம் திரையரங்குகளில் கொண்டாடப்பட்டாலும் இந்த படம் OTTயில் வெளியான போது ஆண்களின் Toxic நடத்தையை ரொமாண்டிசைஸ் செய்யும் விதத்திற்காகவும், பெண்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் படியும் இருப்பதாக பலராலும் விமர்ச்சிக்கப்பட்டு வந்தது.

இந்த படம் OTTயில் வெளியாகிய நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி 100 நாட்கள் ஆனதையொட்டி இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் ‘லவ் டுடே திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்து விட்டது இந்த மாபெரும் வெற்றி சாத்தியமானது உங்களின் அனைவரின் அன்பால் தான் எங்களுக்கு ஆதரவாக நின்று இந்த படத்தை ஒரு cult classic படமாக அமையசெய்ததற்கு நன்றி என்று பதிவிட்டு இருந்தார்.

அர்சனா கல்பாத்தி அளித்த பதில்:

இந்த நிலையில் அர்ச்சனாவின் இந்த பதிவை கண்ட ட்விட்டர் வாசிகள் பலரும், இந்த படத்தை ஒரு Cult Classic படம் என்று குறிப்பிட்டதற்கு காண்டாகி அர்ச்சனாவை கேலி செய்து வருகின்றனர். மேலும், இந்த படம் cult classic அளவிற்கு எல்லாம் ஒர்த் இல்லை என்றும் கூறி வருகின்றனர். ஏற்கனவே அர்ச்சனா கல்பாத்தியிடம் யூடியூப்பர் ஒருவர், பிரதீப் ரங்கநாதன் ஹீரோவா நடித்திருக்கிறார். அதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? என்று கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு சிரித்துக் கொண்டே அர்ச்சனா, நாதன்யா புரொடியூஸ் பண்ணேன் எனக்கு தெரியும் என்று கூறியிருந்த வீடியோ பெரும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement