2000 ரூபாய் நோட்டை செல்லாமல் செய்தவரை 2024ல் செல்லாமல் செய்வோம் – கபிலன் கவிதை

0
438
- Advertisement -

10 ஆண்டுகால மோடியின் ஆட்சி குறித்து கவிஞர் கபிலன் எழுதி இருக்கும் கவிதை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருக்கும் ராமர் கோவில் அனைவரும் அறிந்ததே. இந்தக் கோவில் நாட்டின் பாரம்பரியம் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கிறது. ஸ்ரீராம் உள்நாட்டு தீர்த்தத்தின்படி இராமன் கோயில் மூன்று அடுக்குகளை கொண்ட தளம்.

-விளம்பரம்-

ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. மொத்தம் 392 தூண்களையும், 44 கதவுகளையும் இந்தக் கோயில் கொண்டுள்ளது. மேலும், அயோத்தியில் ராமர் கோயிலுக்கு செல்லும் மேலும், நுழைவாயிலில் யானைகள், சிங்கங்கள், அனுமான் மற்றும் கருடா போன்ற சிலைகள் இருக்கிறது. பாரம்பரிய முறையில் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இப்படி புகழ்பெற்ற அயோத்தி ராமர் கோயில் வருகிற 22 ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது.

- Advertisement -

அயோத்தி ராமர் கோவில் விழா:

அந்த தினத்தில் அனைவருமே வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தி இருக்கிறார். ஆயிரக்கணக்கான பக்தர்களின் கனவு நினைவாக இருக்கிறது. இந்தியா நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை காண வருகை தர இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

விழா குறித்த தகவல்:

அயோத்திக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளியூர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான ராம பக்தர்கள் வருவார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி சோசியல் மீடியா முழுவதும் அயோத்தி ராமர் கோவிலை பற்றிய செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதோடு பலரும் மோடியை விமர்சித்து பதிவு போட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பத்தாண்டு கால மோடியின் ஆட்சியைக் குறித்து தன்னுடைய கவிதைப்பாணியில் கவிஞர் கபிலன் கவிதை எழுதி இருக்கிறார்.

-விளம்பரம்-

கவிஞர் கபிலன் கவிதை:

அதில் அவர்,

பெட்ரோல் விலை திராவக தீக்குளிப்பு

எக்காலமும் அறியாத தக்காளி விலை உயர்வு

ஜிஎஸ்டி மடமை

வங்கி கணக்கை சங்கி கணக்கில் மாற்றியது

நீட் தேர்வால் எம் மக்களை நீட்டி படுக்க வைத்தது

அரசாங்க வருவாயை கோடீஸ்வர கும்பலுக்கு கூறுகெட்டி விற்றது

விமானம் நம்மை விட்டு பறந்து சென்றது

ஆதி பெண்ணை குடியரசு தலைவர் ஆக்கி அதே ஆதி பெண்ணை அம்மணமாக்குவது

2000 ரூபாய் நோட்டை செல்லாமல் செய்தவரை 2024ல் செல்லாமல் செய்வோம் என்று கூறி இருக்கிறார்.

Advertisement