அயோத்தி ராமர் கோயிலுக்கு நடிகை சுகன்யா கொடுத்திருக்கும் காணிக்கை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் அயோத்தி ராமர் கோயிலின் திறப்பு விழா குறித்த செய்தி தான் பேசப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருக்கும் ராமர் கோவில் அனைவரும் அறிந்ததே. இந்தக் கோவில் நாட்டின் பாரம்பரியம் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கிறது.
ஸ்ரீராம் உள்நாட்டு தீர்த்தத்தின்படி இராமன் கோயில் மூன்று அடுக்குகளை கொண்ட தளம். ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. மொத்தம் 392 தூண்களையும், 44 கதவுகளையும் இந்தக் கோயில் கொண்டுள்ளது. மேலும், அயோத்தியில் ராமர் கோயிலுக்கு செல்லும் மேலும், நுழைவாயிலில் யானைகள், சிங்கங்கள், அனுமான் மற்றும் கருடா போன்ற சிலைகள் இருக்கிறது. பாரம்பரிய முறையில் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த புகழ்பெற்ற அயோத்தி ராமர் கோயில் வருகிற 22 ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது.
அயோத்தி ராமர் கோவில் விழா:
அந்த தினத்தில் அனைவருமே வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தி இருக்கிறார். ஆயிரக்கணக்கான பக்தர்களின் கனவு நினைவாக இருக்கிறது. இந்தியா நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை காண வருகை தர இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
சுகன்யா எழுதிய பாடல்:
அயோத்திக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளியூர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான ராம பக்தர்கள் வருவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக முன்னணி நடிகையும், நடன கலைஞருமான சுகன்யா அவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்ற பாடலை எழுதி இசை அமைத்து பாடி இருக்கிறார். பக்தி பரவசம் பரவும் வகையில் இந்த பாடல் அமைந்திருக்கிறது. இந்த பாடலை குழந்தைகள் முதல் பெரியோர்கள் அனைவரும் பாடும் வகையில் இருக்கிறது.
பாடல் குறித்த தகவல்:
மேலும், இந்த ஜெய் ஸ்ரீ ராம் என்ற பாடல் ஆடியோ வடிவில் எழுதப்பட்டிருக்கிறது. விரைவில் வீடியோவாகவும் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. பாடலின் உடைய வரிகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. இப்பாடலின் இசை ஒருங்கிணைப்பை சி சத்யா செய்திருக்கிறார். பாடலின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பேட்டியில் சுகன்யா, 500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு திறக்கப்பட இருக்கிறது. இதனால் நாடு முழுவதும் விழா கோலமாக இருக்கிறது. என்னுடைய நெற்றியில் நான் வரைந்த ஸ்ரீ ராமர் ஓவியம் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
சுகன்யா பேட்டி:
தற்போது கோவில் திறப்பு விழா நடைபெற இருக்கும் வேலையில் என்னுடைய சிறு பங்களிப்பாக இந்த பாடலை நான் சமர்ப்பிக்கிறேன். ஸ்ரீ ராமரின் நாம மகிமை, அவரது பராக்கிரமம், ராமாயண சுருக்கம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள கோயிலை நாம் காணும் பாக்கியம் போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது. மேலும், இந்த பாடலுக்கு ஒத்துழைத்த இசை வாத்திய கலைஞர்கள், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன், அவரது குழுவினருக்கும் நன்றி தெரிவித்ததோடு ஸ்ரீ ராமரின் பரிபூரண அருள் மக்கள் அனைவருக்கும் கிடைக்க நான் வேண்டுகிறேன் என்று கூறி இருக்கிறார்.