ஸ்டாலின் நடித்த சீரியலை பார்த்துளீர்களா.! இதோ காணகிடைக்காத முழு வீடியோ.!

0
8029
m-k-stalin
- Advertisement -

தற்போது வேண்டுமானால் சன், கே, ஜெயா, விஜய் என்று பல்வேறு தொலைக்காட்சிகள் இருக்கலாம். ஆனால், 80 ஸ் காலகட்டத்தில் ரசிகர்களுக்கு பொழுது போக்காக இருந்தது  தூர்தர்ஷன் தொலைக்காட்சி தான். அதிலும் வெள்ளிக்கிழமையானால் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சியை கேட்க வாரம் முழுக்க காத்துக்கொண்டிருந்த காலமும் உண்டு.

-விளம்பரம்-

சாட்டிலைட் வராத அந்த காலகட்டத்தில் தூர்தர்ஷன் மட்டும் தான் தமிழ்நாட்டு மக்களின் ஒரே பொழுதுபோக்கு. தொலைக்காட்சி இல்லதாவர்கள் பக்கத்துக்கு வீட்டிற்கு சென்று கண்டிப்பாக ஓளியும் ஒலியும் நிகழ்ச்சியை பார்த்து விடுவார்கள். அப்போதெல்லாம் மெகா சீரியல்கள் கூட கிடையாது. இருப்பினும்  செவ்வாய்க்கிழமைகளில் ஒளிபரப்பான ஒரு மணிநேர மேடை நாடகத்தைப் பார்க்க, வீடுகளில் பெரும் கூட்டம் கூடியிருக்கும். 

இதையும் பாருங்க : முதன் முறையாக அட்டை பட போட்டோ ஷூட் நடத்திய ரஷி கண்ணா.! சொக்கிப்போன ரசிகர்கள்.! 

- Advertisement -

‘ரயில் சிநேகம்’  , ‘இவளா என் மனைவி?’  போன்ற பல தொடர்கள் 80 காலகட்ட மக்களால் மறக்கமுடியாத ஒன்று. அதிலும் இந்த தொடர்கள் எல்லாம் அதிகபட்சம் 15 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பானது என்பது கூடுதல் வியப்பு. அந்த வகையில் 80 காலகட்டத்தில் மு.க. ஸ்டாலின் கதாநாயகனாக நடித்த குறிஞ்சி மலர் சீரியல் ஒளிபரப்பானது.

80-களின் இறுதியில் தி.மு.க தொண்டர்கள் பலரும் தங்களது குழந்தைகளுக்கு அரவிந்தன் எனப் பெயர் சூட்டிமகிழ்ந்தார்கள். தொலைக்காட்சி சீரியலில் இடம்பெற்ற ஓர் கதாபாத்திரத்தின் பெயர் குழந்தைகளுக்குச் சூட்டப்பட்டது அதுதான் முதலும் கடைசியுமாக இருக்கும். அந்த பெருமை ஸ்டாலினயே சாரும்.

-விளம்பரம்-

ஸ்டாலின் ‘குறிஞ்சி மலர்’ தொடரில் அரவிந்தன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். அந்த பெயரை தான் தொண்டகர்கள் தனது பிள்ளைகளுக்கு பெயராக வைத்தனர். குறிஞ்சி மலர் சீரியல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற இவர் தேர்தல் பிரசாரத்திற்குச் சென்ற இடங்களில் எல்லாம் ‘குறிஞ்சி மலர் நாயகனே வருக’ என விளம்பர பேனர்கள் வைத்து, தி.மு.க. தொண்டர்கள் வரவேற்றனர்.  இதோ ஸ்டாலின் நடித்த அந்த தொடரின் முழு தொகுப்பு.

Advertisement