உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமான ‘மாமன்னன்’ எப்படி இருக்கிறது ? முழு விமர்சனம் இதோ.

0
2889
Maamannan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் உதயநிதி ஸ்டாலின். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் கடைசி படம் மாமன்னன். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியிருக்கும் மாமன்னன் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடிங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும் சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்றும் அனைவரையும் சமமாக பார்க்கும் பட்டியலின மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன். இதில் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும் அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை இயக்குனர் சொல்லி இருக்கிறார்.

- Advertisement -

படத்தில் சமூகநீதி சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்ட செயலாளர் பகத் பாஸில். இவர் ஆதிக்க வர்க்கத்தை சேர்ந்தவர். அந்த கட்சியில் எம்எல்ஏ எம்எல்ஏ ஆக இருப்பவர் வடிவேலு. இவர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர். வடிவேலுவின் மகன் தான் உதயநிதி ஸ்டாலின். மேலும், உதயநிதி இடத்தில் கீர்த்தி சுரேஷ் இலவசமாக கல்வி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இதை பகத் பாஸில் அண்ணன் உடைத்து சேதாரம் செய்கிறார்.

இதனால் இந்த விவகாரம் பகத் பாஷிலிடம் செல்கிறது. அப்போது இரு தரப்பினர் மத்தியிலும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஆனால், வடிவேலுக்கு சரிசமமான அங்கீகாரமோ மரியாதையோ கொடுக்கவில்லை. இதனால் உதயநிதி கோபப்படுகிறார். பின் பகத் பாசிலை அவர் அடிக்கிறார். இதனால் கட்சியில் பெரும் பிரச்சனை எழுதுகிறது. பின் பகத் பாஸில் வேறு கட்சிக்கு செல்கிறார். அந்த நேரம் பார்த்து சட்டசபை தேர்தல் வருகிறது.

-விளம்பரம்-

சமூகநீதி சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக வடிவேலு தேர்தலில் நிற்கிறார். அவரை எதிர்த்து பகத் பாஸில் நிற்கிறார். இறுதியில் இந்த தேர்தலில் வடிவேலு வெற்றி பெற்றாரா? ஆதிக்க வர்க்கத்தின் மனநிலை என்ன? எல்லோருக்கும் சமமான உரிமை கிடைத்ததா? என்பதே படத்தின் மீதி கதை. முதல் பாதி மிரட்டலாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் சில கட்சி காட்சிகள் யூகிக்கும் அளவில் இருந்தாலும் நன்றாகத்தான் சென்றிருக்கிறது.

உதயநிதியின் நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். படத்தில் வசனங்கள் எல்லாம் கூர்த்திட்ட பட்ட கத்தியாகவே அனைவர் மனதிலும் இறங்கி இருக்கிறது என்று சொல்லலாம். படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு பெரியளவு கதாபாத்திரம் இல்லை என்றாலும் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். படம் முழுவதையும் பகத் பாசிலும், வடிவேலுவும் தான் சுமந்து சென்றிருக்கிறார்கள் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

படத்தினுடைய கதைகளமும், கொண்டு சென்ற விதமும் சிறப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். பாடல்கள் படத்திற்கு கூடுதல் படத்தை கொடுத்திருக்கிறது. ஒரு அழுத்தமான கதைக்களத்தை சிறப்பாக இயக்குனர் கொடுத்திருக்கிறார். படத்தின் தலைப்பிற்கு ஏற்றப்ப தேவையான அனைத்தையும் மாரி செல்வராஜ் கொடுத்திருக்கிறார். இருந்தாலும், சில இடங்களில் காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எமோஷனல் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் கனெக்ட் ஆகுவதற்கு கொஞ்சம் கடினம் தான். மொத்தத்தில் மாமன்னன் படம் எல்லோரும் சென்று பார்க்கும் படியாக இருக்கிறது.

நிறை:

படத்தில் வடிவேலு, பகத்பாசில் நடிப்பு சிறப்பு

ஏ ஆர் ரகுமானின் இசை நன்றாக இருக்கிறது

மேக்கிங், இயக்கம் சிறப்பு

இடைவெளிக்கு பிறகு காட்சிகள் நன்றாக இருக்கிறது

குறை:

உதயநிதியின் நடிப்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்

படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்

எமோஷனல் காட்சிகள் சில இடங்களில் செட்டாகவில்லை

மொத்தத்தில் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன்- மக்கள் மனதில் ஆட்சியை அமைக்கும்

Advertisement