திருமணத்திற்கு பின் வெளியான முதல் படம் – எப்படி இருக்கிறது நயனின் ‘O2’ – முழு விமர்சனம்.

0
194
O2
- Advertisement -

இயக்குனர் ஜி எஸ் விக்னேஷ் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் படம் O2. இந்த படத்தில் நயன்தாரா, ரித்விக், பரத் நீல கண்டன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். அனைவரும் எதிர்பார்த்து இருந்த O2 திரைப்படம் ஓடிடியில் இன்று வெளியாகி இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

கணவனை இழந்த இளம் வயது விதவை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார். அவருடைய ஒரே மகன் ரித்விக். அவனுக்கு சுவாச கோளாறு பிரச்சனை இருக்கிறது. எப்போதும் ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் தான் அவன் சுவாசிக்க முடியும். அதற்கான ஆபரேஷன் செய்வதற்காக கோயம்புத்தூரில் இருந்து கொச்சிக்கு ஆம்னி பேருந்து மூலம் நயன்தாரா செல்கிறார். கடும் மழைக்கு இடையில் நிலச்சரிவில் அந்த பேருந்து சிக்கிக் கொள்கிறது.

இதையும் பாருங்க : பில்லா பட ஷூட்டிங்கில் அசிங்கப்படுத்தியுள்ள நமீதா – பேசுவதையே நிறுத்தியுள்ள நயன். அவரே சொன்ன வீடியோ இதோ.

- Advertisement -

பேருந்தில் இருப்பவர்கள் சுவாசிக்க ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அதனால் நயன்தாராவின் மகன் ரித்விக் ஆக்சிஜன் சிலிண்டரை கைப்பற்றி சுவாசிக்க முயற்சிக்கின்றனர். தன் மகனை காப்பாற்ற நயன்தாரா என்ன முயற்சி எடுக்கிறார்? இறுதியில் பேருந்துக்குள் இருந்தவர்களெல்லாம் காப்பாற்றப்பட்டார்களா? நயன்தாரா மகனுக்கு சிகிச்சை எடுக்கப்பட்டதா? என்பது தான் படத்தின் மீதி கதை. பேருந்தில் பயணிக்கும் சக பயணிகளாக ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு அரசியல்வாதி, காதலியுடன் ஓடிப்போக திட்டமிட்டு பயணிக்கும் ஒரு காதலன்.

அவரது காதலி, காதலியின் அப்பா, சிறையில் இருந்து விடுதலையாகி அம்மாவைப் பார்க்கப் போகும் ஒருவர், ஆம்னி பேருந்து ஓட்டுநர் என்று இவர்களுடன் சில கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். இவர்களில் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பரத் நீலகண்டனுக்கு மட்டுமே படத்தில் அதிக முக்கியத்துவம் காண்பிக்கப்பட்டிருக்கிறது. பேருந்தில் போதைப் பொருளை எடுத்துச் சென்று கேரளாவில் சேர்க்க நினைக்கும் போது சிக்கிக் கொள்கிறார். எப்படியாவது தப்பிக்க வேண்டும் என கொஞ்ச நேரம் ரவுடி போலீசாக மாறுகிறார்.

-விளம்பரம்-

மற்ற கதாபாத்திரங்களும்தங்களுக்கு கொடுத்த காட்சிகளை சரியாக செய்திருக்கிறார்கள். நயன்தாராவின் மகனாக யூடியூப் புகழ் ரித்விக் நடித்திருக்கிறார். முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு நடித்திருக்கிறார். படத்தில் பேருந்தில் சிக்கியவர்களை காப்பாற்ற தேசிய பேரிடர் குழு போராடுவது மாதிரி கதை அமைத்திருந்தால் படம் நன்றாக சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பேருந்து சிக்கிய குடும்பத்தினர் உறவினர்கள் கூட ஒரு சில பேரை மட்டும் தான் சம்பவ இடத்திற்கு வருகிறார்கள். பெரியதாக பேருந்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கான காட்சிகள் இல்லை.

பேருந்து உள்ளே நடக்கும் காட்சிகளை தான் அதிகமாக இயக்குனர் காண்பித்திருக்கிறார். இதனால் படத்தின் சுவாரசியம் குறைவாக இருக்கிறது. 2 மணிநேரம் நீட்டிக்கப்பட்ட ஒரு குறும்படம் ஆகவே இந்த படம் தெரிகிறது. ஒரே ஒரு பேருந்தில் நடக்கும் கதை என்பதால் பரபரப்பு இல்லாமல் இருக்கிறது. முதல் படத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாராவை வைத்து படம் இயக்கி இருந்தாலும் அதற்கான முக்கியத்துவத்தை இழந்து விட்டார் இயக்குனர். தாய்மையின் போராட்டத்தை காட்டக்கூடிய கதை.

நிறைகள் :

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

நயன்தாரா தன்னுடைய வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ரித்விக் நடிப்பு சூப்பர்.

கதை களம் நன்றாக இருக்கிறது.

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

குறைகள் :

கதையைக் கொண்டு சென்ற விதம் தான் விறுவிறுப்பை குறைந்திருக்கிறது.

அடுத்தடுத்து நடக்கும் காட்சிகளை சுவாரசியமாக காண்பித்து இருந்தால் நன்றாக இருக்கும்.

பேருந்து உள்ளே நடக்கும் காட்சிகளை அதிகமாகவும், மீட்புப்பணி குழுவின் உடைய காட்சிகளை குறைவாகவும் காண்பித்திருப்பது சற்று சலிப்படைய வைத்திருக்கிறது.

கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் சுமாரான படமாக இருக்கிறது.

O2- லெவல் குறைவாக இருக்கிறது.

Advertisement