பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த தர்ஷன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் நாடு. இந்த படத்தில் மகிமா நம்பியார் நடித்திருக்கிறார். இந்த படத்தை எம் சரவணன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இவர்களுடன் சிங்கம் புலி, ஆர் எஸ் சிவாஜி, அருள் தாஸ், இன்பா ரவிக்குமார், வசந்த் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சக்திவேல் ஒளி பதிவு செய்திருக்கிறார். சத்யா இசையமைத்திருக்கிறார். இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
இந்த படம் கொல்லிமலையில் உள்ள தேவ நாடு என்ற மலைவாழ் கிராமத்தை சுற்றி நடக்கிறது. இந்த கிராமத்தில் எந்தவித அடிப்படை வசதிகளுமே கிடையாது. ஒரு சின்ன கிராமம். அப்படி இருக்கும் இந்த ஊரில் ஒரு மருத்துவமனை இருக்கிறது. இருந்தாலுமே இங்கு மருத்துவர்கள் கிடையாது. இதனால் நிறைய பேர் இறந்து விடுகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் கிராம மக்கள் போராடி கஷ்டப்பட்டு ஒரு மருத்துவரை வரவேற்கின்றார்கள். அவர்தான் ஹீரோயினி மகிமா நம்பியார்.
இவர்தான் இந்த ஊருக்கு மருத்துவராக வருகிறார். ஆனால், அவருக்கு வந்த உடனே இந்த ஊர் பிடிக்காமல் போகிறது. இதனால் ட்ரான்ஸ்பர் வாங்கி வேறு ஒரு இடத்திற்கு செல்ல யோசிக்கிறார். இந்த ஊரின் தலைவராக சிங்கம்புலி இருக்கிறார். அந்த ஊரில் வாழும் இளைஞராக தர்ஷன் இருக்கிறார். இவர் தான் மகிமா நம்பிக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுக்கிறார். மேலும், மகிமாவும் தன்னுடைய தொழில் தர்மத்திற்காக அந்த ஊர் மக்களுக்கு உதவி செய்து சில பேரை காப்பாற்றுகிறார்கள்.
இதனால் அந்த ஊர் மக்கள் மகிமாவை தெய்வமாக பார்க்கின்றது. அதுமட்டுமில்லாமல் மகிமாவை இந்த ஊரை விட்டு அனுப்பக்கூடாது என்று ஊர் மக்கள் சில வேலைகளை செய்கின்றார்கள். இறுதியில் மஹிமா இந்த ஊரை விட்டு சென்றாரா? அங்கேயே தங்கினாரா? ஊர் மக்கள் செய்த வேலை என்ன? என்பதே படத்தின் மீதி கதை. தர்ஷன் இந்த படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார். இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மலைவாழ் இளைஞராக இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்து இருக்கிறார். இவரை அடுத்து தர்ஷின் அப்பாவாக ஆர் எஸ் சிவாஜி, ஊர் தலைவராக சிங்கம்புலியும் தங்களுடைய அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
படத்தில் இவருடைய காமெடி ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்திருக்கிறது. இவர்களை அடுத்து கதாநாயகி மகிமாவும் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இயக்குனர் ஒரு எதார்த்தமான மலைவாழ் மக்களின் நிலைமையை இந்த படத்தில் காண்பித்து இருக்கிறார். இயக்குனர் கதைக்களத்தை கொண்டு சென்ற விதமும் நன்றாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் டிஜிட்டல் உலகம், மலை கிராமங்களுக்கு கிடைக்காத அடிப்படை வசதிகள், நீட் போன்ற பல சமூக பிரச்சனைகளையும் இயக்குனர் படத்தில் சாமர்த்தியமாக சொல்லியிருக்கிறார்.
மேலும், வெளிப்படையாக அரசாங்கம், மருத்துவர்கள் மீது குறைகளை சொல்லாமல் மக்கள் சிந்திக்கும் வகையில் இயக்குனர் கொடுத்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. ஆனால், பாடல்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. சில லாஜிக் மிஸ்டைக் தான் இருக்கிறது. சில இடங்களில் பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்திருக்கிறது. வசனங்கள் சில இடங்களில் அழுத்தமாக கொடுத்திருக்கலாம். மற்றபடி குடும்பமாக சேர்ந்து எல்லோரும் பார்க்கும் படமாக நாடு இருக்கிறது.
நிறை:
தர்ஷின் நடிப்பு சிறப்பு
மற்ற நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
கதைக்களம் அருமை
ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது
சமூக விழிப்புணர்வு படம்
குறை:
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
பாடல்கள் பெரிதாக கவரவில்லை
சில காட்சிகள் கடுப்பை ஏற்றி இருக்கிறது
சில இடங்களில் வசனங்களை அழுத்தமாக சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்
மொத்தத்தில் நாடு – நல்ல முயற்சி.