8வது திருமண நாள் – தனது கணவரின் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து சொன்ன நீபா.

0
8025
neepa
- Advertisement -

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது நடனத்தால் அனைவரின் கவனத்தயும் ஈர்த்தவர் நீபா. விஜய் தொலைக்காட்சயில் ஒளிபரப்பான ‘கவியாஞ்சலி’ என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் பல்வேறு நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நீபா, பல்வேறு சீரியல்களிலும் படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக விஜய் நடிப்பில் வெளியான காவலன் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக இவர் நடித்த கதாபாத்திரத்தின் மூலம் சினிமா ரசிகர்களால் மிகவும் அறியப்பட்டார்.

-விளம்பரம்-

சன் டிவியில் ஒளிபரப்பான ‘மஸ்தானா மஸ்தானா’ மற்றும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ போன்ற நிகழ்ச்சிகளின் டைட்டில் வின்னராகவும் வந்தார். மேலும், தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் ரெண்டு படங்களில் டான்ஸ் மாஸ்டராவும் பணியாற்றி இருக்கிறார். காவலன் படத்தை தொடர்ந்து ‘பெருசு’, ‘பள்ளிக்கூடம்’, ‘தோட்டா’, ‘கண்ணும் கண்ணும்’, ‘அம்முவாகிய நான்’ உள்பட பல படங்களில் நடித்த நடிகை நீபா கடந்த 2013 ஆம் ஆண்டு தொழிலதிபர் சிவகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : மனுஷன் உயிர் போவுதுனு மறந்து அவர் நடிப்பு தான் தெரிஞ்சது – சிவாஜி இறப்பு பற்றி பேசிய YG – வச்சி செய்யும் மீம் கிரியேட்டர்கள்.

- Advertisement -

திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்த பின்பும் ஒரு சில சீரியல்களில் தலை காண்பித்து வந்தார் நீபா. சமீபத்தில் இவர், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் மாம்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், இவர் இடையில் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அப்போது அவர் மேடையில் கண்ணீர் மல்க அழுதார்.

ஆனால், அவரது மகளோ தோல்வியை தாங்க முடியாமல் தனது தாய் அழுததை பார்த்து கலங்காமல் ‘பரவா இல்லை அம்மா, அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் ‘ என்று ஆறுதல் கூறினார். இப்படி ஒரு நிலையில் இன்று தீபா தனது 8வது திருமண நாளை கொண்டாடி வருகிறார். இதனால் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தனது கணவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் தீபா.

-விளம்பரம்-
Advertisement