ஷபானுவுடன் ஏற்பட்ட ஈகோ பிரச்சனை,சீரியலில் இருந்து விலகிய சோனா – நீண்ட இடைவெளிக்கு பின் என்ட்ரி கொடுக்கும் கார்த்தி பட நாயகி.

0
5060
Shabnam
- Advertisement -

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை சாதனா மாரி சீரியலில் நடிக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக மக்கள் மத்தியில் பேராதவரை பெற்று வரும் சீரியலில் ஒன்று தான் மாரி சீரியல்.

-விளம்பரம்-

இந்த தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பி வருகிறார்கள். இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இது தெலுங்கு சீரியலின் ரீமேக் ஆகும். இருந்தாலும், இந்த சீரியல் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த சீரியலில் மாரி என்கிற பெண்ணுக்கு முன்கூட்டியே நடப்பது அம்மனின் அருளால் தெரிய வருகிறது.

- Advertisement -

மாரி சீரியல்:

இதனால் அவர் வரும் ஆபத்தில் இருந்து பிறரை காப்பாற்றுகிறார். இதனால் அவரது வாழ்க்கையில் நடக்கும் சோதனைகள் தான் சீரியலின் கதையாக சென்று கொண்டு இருக்கின்றது. இந்த சீரியலில் தாரா என்கிற மாமியார் வில்லி கதாபாத்திரத்தில் சோனா நடித்து இருந்தார். ஆனால், திடீரென நடிகை சோனா சீரியலில் இருந்து வெளியேறி விட்டார். இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திருக்கிறது. காரணம், இந்த சீரியல் நடிகை ஷப்னமிற்கும் நடிகை சோனாவிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தான்.

மீண்டும் என்ட்ரி எடுக்கும் சாதனா:

இதனால் தான் சீரியலில் இருந்து சோனா விலகி விட்டார். இந்நிலையில் தற்போது சோனா நடித்த தாரா கதாபாத்திரத்தில் தான் நடிகை சாதனா நடிக்கிறார். இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த தென்றல் தொடரில் நடித்திருந்தார். இந்த தொடரில் இவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று இருந்தார். அதற்கு பிறகு இவர் சீரியலில் காணவில்லை. தற்போது நீண்ட இடைவேளைக்கு இவர் மீண்டும் சீரியலில் நடிக்க இருக்கிறார்.

-விளம்பரம்-

சாதனா குறித்த தகவல்:

மேலும், சாதனா மீண்டும் சீரியலில் நடிக்க இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தென்னிந்தியா சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் சாதனா. இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி நடிகையையும் ஆவார்.

சாதனா திரைப்பயணம்:

இவர் 80 மற்றும் 90 காலத்தில் படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் இவர் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார். இவர் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

Advertisement