“குறுக்க இந்த கௌஷிக் வந்தா” என கலாய்த்த ப்ளு சட்டை மாறன் – பதிலடி கொடுத்த மாவீரன் தயாரிப்பாளர்.

0
1612
- Advertisement -

எளிய பின்னணியிலிருந்து வந்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் ஹீரோயிசத்திற்கு மட்டுமில்லை அவரது நகைச்சுவை திறனுக்கும் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது தமிழ் சினிமா உலகில் கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, பாடலாசிரியர், தொகுப்பாளர் மட்டுமில்லாமல் பன்முகம் கொண்டு திகழ்கிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது

- Advertisement -

தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகிறது.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார்.

நம்பிக்கை தெரிவிக்கும் சிவகார்த்திகேயன் :

இப்படத்திற்கு பரத் சங்கர் இசை அமைகிறார். இந்நிலையில் தான் படத்தின் ஏற்பாடுகள் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கட்டிருந்தது. மேலும் இதற்கு முன்னர் சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் பெரிதாக போகாத நிலையில் இசை வெளியிட்டு விழாவின் போது பேசிய சிவா “கடைசி படம் மிஸ் ஆயிடுச்சு, இந்த படம் கண்டிப்பா மிஸ் ஆகாது என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-

ப்ளு சட்டை மாறன் பதிவு :

இந்நிலையில் தான் இந்த படத்தை கலாய்த்து பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் ட்விட்டர் பதிவு ஒன்றி வெளியிட்டிருந்தார். அந்த ட்விட்டர் பதிவிற்கு தக்க பதிலடியும் கொடுத்துள்ளார் மாவீரன் படத்தின் தயாரிப்பாளர் ப்ளூ சட்டை மாறன். அவர் போட்டிருந்த பதிவில் மாவீரன் இம்மாதம் 14 அன்று வெளியாகும் நிலையில்… 12 ஆம் தேதி டாம் க்ரூஸ் நடித்த Mission Impossible வெளியாகிறது. முதல் நாளுக்கான IMAX முன்பதிவு நிரம்பி வருகிறது.

‘குறுக்க இந்த கௌஷிக் வந்தா?’ மொமன்ட் என்று சிங்கம் புலி காமெடியின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதற்கு பதிலளித்த படத்தின் தயாரிப்பாளர் அருண் விச்வா போட்டிருந்த பதிவில் “வணக்கம் சார், இமை அருண் விஸ்வா, மாவீரன் படத்தோட தயாரிப்பாளர்! எனக்கு என் படம் தான் எனக்கு அவதார், ஆர்ஆர்ஆர், மிஷன் இம்பாஸிபில் எல்லாமே. இந்த வயசுக்கு இந்த பிக் ஷேர் செய்திருக்க வேண்டாம் சார் என்று பதிலளித்துள்ளார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement