பணக்காரனா ஆகிடீங்க கொஞ்சம் இல்லாதவங்களுக்கு ஹெல்ப் பண்ணாலாமே – ரசிகர் கமென்டிற்கு மதன் கௌரி பதில்.

0
1231
madangowri
- Advertisement -

பொதுவாகவே யூடியூப் பலருக்கு பொழுது போக்கு தளமாக இருந்தாலும் சில பேருக்கு வருமானம் ஈட்டும் தளமாக அமைந்து வருகிறது. யூட்யூப் மூலம் வீடியோக்களை வெளியிட்டு பல பேர் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். அந்த வகையில் யூடியூப் மூலம் பிரபலமானவர் தான் மதன் கௌரி. இவர் யாரும் அறியாத பல சுவாரசியமான தகவலை வீடியோவாக வெளியிட்டு வருவதன் மூலமாகவே மக்கள் மத்தியில் சீக்கிரமாகவே பிரபலமாகிவிட்டார் என்று சொல்லலாம். அதிலும் வெளிநாடுகளில் நடக்கும் சில நிகழ்வுகளை நமக்கு புரியும் வகையில் எளிதாக தமிழில் இவர் சொல்கிறார்.

-விளம்பரம்-

அது மட்டுமில்லாமல் இந்தியாவில் நிலவும் பல சமூகப் பிரச்சினைகளையும் இவர் முன் வைக்கிறார்.மேலும், மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை புரிந்து கொண்டு அதன்படி வீடியோக்கள் வெளியிடுவதன் மூலம் தான் இவர் அசால்டாக பிரபலமானார் என்றுகூடச் சொல்லலாம். தற்போது இவர் ஒரு மாதத்திற்கு இலட்சக்கணக்கான ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

எலான் மஸ்க் வரை கவனம் ஈர்த்த மதன் :

கடந்த ஆண்டு மதன் கவரி தன் டுவிட்டரில் பிரபல கார் கம்பெனி அதிபர் எலான் மஸ்க் அவர்களை டேக் செய்து இந்தியாவில் மின்சார வாகனங்கள் உற்பத்தி எப்போது தொடங்கப்படும் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.அந்த ட்வீட்டுக்கு சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் எலான் மஸ்க் பதில் அளித்திருந்தார். அதில் அவர், இந்தியாவில் அதிக இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. அதனால் மின்சார வாகனம் இறக்குமதி சற்று தாமதம் ஆகிறது என்று பதில் அளித்து இருந்தார்.

ரசிகர் போட்ட கமன்ட் :

இப்படி தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு உலகமே வியந்து பார்க்கும் ஒரு சிஇஓ ட்விட்டரில் பதிலளித்தது வியப்பை ஏற்படுத்தியது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு மதன் சோஷியல் மீடியாவில் பிரபலமாக இருக்கிறார். இதனால் மதனுக்கு சோசியல் மீடியாவில் பாலோஸ் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படி ஒரு நிலையில் நெட்டிசன் ஒருவர்,மதன் கௌரியின் இன்ஸ்ட்டா பக்கத்தில் ‘பணக்காரனா ஆகிடீங்க கொஞ்சம் இல்லாதவங்களுக்கு ஹெல்ப் பண்ணாலாமே’ என்று கமன்ட் செய்து இருந்தார்.

-விளம்பரம்-

மதன் கௌரி பதில் :

இதற்கு பதில் அளித்த மதன் கௌரி, ஹெல்ப் பண்றத சொன்னா ஏன் சொல்லி காமிக்கிறீங்கனு கேப்பீங்க, chil பிரதர், அனைவருக்கும் கர்மா என்பது இருக்கும். நான் நல்லது செய்தால் நல்லது வரும். எதுவும் செய்யவில்லை என்றால் எனக்கும் ஒன்றும் வரப்போவது இல்லை என்று பதில் அளித்துள்ளார். அதே போல சமீபத்தில் மதன் கௌரிக்கு தனது காதலியுடன் படு பிரம்மாண்மாக திருமணம் கூட முடிந்தது.அதுவும் இவர்கள் இருவரும் பள்ளிப்பருவ நண்பர்கள், இதுகுறித்து அவர் தெரிவித்த போது பள்ளி முடிந்தும் எங்கள் நட்பு தொடர்ந்தது.

This image has an empty alt attribute; its file name is mathan222-1024x575.jpg

மதன் கௌரி திருமணம் :

பின்னர் வேறு வேறு கல்லூரியில் நாங்கள் சேர்ந்தோம். இருவரின் நட்பு காதலானது. ஒரு கட்டத்தில் ஒரு பெரிய சண்டை ஏற்பட்டு இரண்டு பேரும் பிரேக் அப் பண்ணிட்டோம். அந்த சண்டைக்கு காரணம் நான் தான். அந்த பிரேக்கப் கொடுத்த மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க தான் நான் யூடியூப் சேனல் ஆரம்பித்தேன். அதன் பிறகு திரும்பவும் நித்யா கிட்ட பேசும் வாய்ப்பு கிடைத்தது. பின் நான் மன்னிப்பு கேட்டு என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதமா என்று கேட்டேன். அவளும் ஓகே என்று சொல்லிட்டாள் என்று கூறி இருந்தார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் மதன் கௌரி.

Advertisement