‘நீங்கள் ஹீரோவாக மாற நேரம் இது’ தனது படத்தின் இசையமைப்பாளருக்கும் மாதவன் போட்ட கமன்ட்.

0
904
madhavan
- Advertisement -

தமிழ் திரையுலகில் 2012-ஆம் ஆண்டு வெளி வந்த படம் ‘அம்புலி’. இந்த படத்திற்கு வெங்கட் பிரபு ஷங்கர் – சாம்.சி.எஸ் – சதீஷ் – மெர்வின் என நான்கு பேர் இணைந்து இசையமைத்திருந்தனர். இது தான் சாம்.சி.எஸ் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் தமிழ் திரைப்படமாம். இதனைத் தொடர்ந்து ‘கடலை, கடிகார மனிதர்கள், புரியாத புதிர்’ என அடுத்தடுத்து சில படங்களுக்கு இசையமைத்தார் சாம்.சி.எஸ். 2017-ஆம் ஆண்டு வெளி வந்த படம் ‘விக்ரம் வேதா’.

-விளம்பரம்-

இந்த படத்திற்கும் சாம்.சி.எஸ் தான் இசையமைத்திருந்தார். இதில் பிரபல நடிகர்கள் மாதவன் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தினை இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி சேர்ந்து இயக்கியிருந்தனர். இப்படத்தில் சாம்.சி.எஸ்ஸின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரிதும் பேசப்பட்டது. அதன் பிறகு “தியா, இரவுக்கு ஆயிரம் கண்கள், MR. சந்திரமௌலி, லக்ஷ்மி, அடங்க மறு, வஞ்சகர் உலகம், நோட்டா, 100, அயோக்யா, K 13, கொரில்லா, தேவி 2, ஜடா” என பல பிரபல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தார் சாம்.சி.எஸ்.

இதையும் பாருங்க : தனியாக இருக்கும் உங்கள் வீட்டில் சிகெரெட் எப்படி வந்தது? போட்டோவை வெளியிட்டு நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிய ரேஷ்மா.

- Advertisement -

தற்போது, பிரபல இசையமைப்பாளர்கள் தமிழ் திரையுலகில் ஹீரோ அவதாரம் எடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார், விஜய் ஆண்டனி மற்றும் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இவர்கள் மூவருமே இசையமைப்பாளர்களாக தங்களது பயணத்தை சினிமாவில் துவங்கினார்கள். இப்போது மூவருமே நடிகர்களாக கைவசம் நிறைய படங்கள் வைத்திருக்கின்றனர்.

இந்நிலையில், இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக போட்டோஷூட் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த பிரபல நடிகர் மாதவன் “ஸ்டில்ஸ் சூப்பராக இருக்கிறது. நீங்கள் சினிமாவில் ஹீரோவாகப் போகும் நேரம் வந்து விட்டது” என்று கமென்ட் போட்டிருக்கிறார். மாதவன் சொன்ன விஷயம் விரைவில் நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-விளம்பரம்-

இதையும் பாருங்க : நடிகர் விமல் முதலில் திரையில் தோன்றியது இந்த விஜய் படத்தில் தான்.

‘ஜடா’ படத்துக்கு பிறகு சாம்.சி.எஸ் இசையமைத்த ‘கைதி’ திரைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளி வந்தது. கார்த்தி கதையின் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தினை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில் சாம்.சி.எஸ் போட்டிருந்த பின்னணி இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றிருந்தது. தற்போது, இசையமைப்பாளராக தமிழில் எட்டு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் சாம்.சி.எஸ்.

Advertisement