தனியாக இருக்கும் உங்கள் வீட்டில் சிகெரெட் எப்படி வந்தது? போட்டோவை வெளியிட்டு நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிய ரேஷ்மா.

0
2588
reshma pasupathy

கொரோனா வைரஸத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் உலகமே ஆட்டம் கண்டு போய் இருக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் வேதனையிலும் கவலையிலும் உள்ளார்கள். இந்தியாவில் கொரோனாவினால் 10, 000 பேருக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 300 க்கும் மேற்பட்டோர் பலியாகியும் உள்ளனர். இதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அனைவரும் மாஸ்க் மற்றும் சானிடைசர் போன்றவற்றை உபயோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது. இன்றுடன் ஊரடங்கு முடியவிருந்த நிலையில் தற்போது ஏப்ரில் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால் பல்வேறு பிரபலங்களும் வீட்டில் இருந்தபடி எதாவது புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். ஆனால், சமீபத்தில் பிக் பாஸ் புகழ் ரேஷ்மா வெளியிட்ட புகைப்படத்தால் வம்பில் சிக்கி கொண்டுள்ளார்.

இதையும் பாருங்க : ஊரடங்கில் ஜாக்கிங் சென்ற சிம்பு, அதுவும் எங்கே ஓடியுள்ளார்னு பாருங்க. வைரலாகும் வீடியோ.

- Advertisement -

புஷ்பா புருஷன்” என்ற டயலாக் மூலம் மக்களிடையே பிரபலம் ஆனவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் பிரபல நடிகரான பாபி சிம்ஹாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ரேஷ்மா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் அறிமுகமானாலும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தான் முதலில் அறிமுகமானர். அதற்குப் பின்னர் அவர் சன் தொலைக் காட்சியில் பிரபலமான தொடர்களில் ஒன்றான “வம்சம்” என்ற தொடரின் மூலம் சின்ன திரையில் நடிக்க தொடங்கினார்.

இதனை தொடர்ந்து படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. பின்னர் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்போதும் நியூட்ரலாக செயல்பட்டதால் என்னவோ பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். ரேஷமாவிற்கு திருமணம் ஆகி விவாகரத்தும் ஆகிவிட்டது.தற்போது தனியாக தான் வாழ்ந்து வருகிறார் ரேஷ்மா.

இதையும் பாருங்க : நடிகர் விமல் முதலில் திரையில் தோன்றியது இந்த விஜய் படத்தில் தான்.

-விளம்பரம்-

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.  புகைப்படத்தில் சிகரெட் டப்பா இருப்பதை கவனித்த நெட்டிசன்கள் “தனியாக இருக்கும் உங்கள் வீட்டில் இது எப்படி வந்தது ? எதுக்கு சிகரெட் பாக்கெட்? என்று கமென்ட் செய்து வருகிறார்கள். 

Advertisement