தன் மகன் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக துபாய்க்கு குடிபெயரும் நடிகர் மாதவன் – இந்தியாவில் பயிற்சி செய்ய முடியாத காரணம் ?

0
808
madhavan
- Advertisement -

திகழ்பவர் மாதவன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், படத்தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டுள்ளார். 2000 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த அலைபாயுதே படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். கோலிவுட்டின் சாக்லேட் பாய் என்று தான் இவரை அனைவரும் அழைப்பார்கள்.

-விளம்பரம்-

மாதவன் மகன் வேதாந்த் :

இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது மாதவன் படங்களில் மட்டும் இல்லாமல் வெப்சீரிஸ்களிலும் பட்டையை கிளப்பி வருகிறார். இந்நிலையில் தன் மகனுக்காக நடிகர் மாதவன் தன் குடும்பத்துடன் துபாய்க்கு குடி பெயர்ந்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் மாதவன், சரிதாவை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார்.

இதையும் பாருங்க : முன்ன மதராஸி தான் நம்ம மொழினு நெனச்சிட்டு இருந்தானுங்க, இப்போ இப்படி கூப்புடுறானுங்க – தனுஷை இந்தி ரிப்போர்டர் கேட்ட கேள்வியால் கடுப்பான தமிழ் ரசிகர்கள்.

- Advertisement -

நீச்சல் போட்டிகளில் குவித்த மெடல்கள் :

தற்போது இவருக்கு 16 வயது ஆகிறது. வேதாந்த் மாதவன் விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் உள்ளவர். இதனால் இவர் நீச்சல் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். மேலும், இவர் பல நீச்சல் போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பதக்கங்களையும் வென்றுள்ளார். அந்தவகையில் கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் வேதாந்த் பங்குபெற்று இருந்தார். இதில் இவர் 7 பதக்கங்களை வென்று அசத்தி இருக்கிறார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்க துபாய் பயணம் :

இதற்கு பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் வேதாந்த் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்காக பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். ஆனால், தற்போது கொரோணா காரணமாக இந்தியாவில் உள்ள பெரிய நீச்சல் குளங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் ஒலிம்பிக் போட்டிக்கு வேதாந்த் தயாராகி வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் தன்னுடைய மகனின் நீச்சல் பயிற்சிக்காக நடிகர் மாதவன் தன் மனைவியுடன் துபாய்க்கு குடி பெயர்ந்து உள்ளார்.

-விளம்பரம்-

இந்தியாவில் பயிற்சி எடுக்காதது ஏன் :

இதுகுறித்து இவர் பேட்டியும் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் உள்ள பெரிய நீச்சல் குளங்கள் எல்லாம் மூடப்பட்டு உள்ளது. நானும் என்னுடைய மனைவியும் எங்களுடைய மகன் உடன் துபாயில் இருக்கிறோம். இங்கு சிறந்த நீச்சல் குளங்களில் பயிற்சி பெற முடிகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டிக்காக வேதாந்த் தயாராகி வருகிறார். அவருக்கு தேவையான உதவிகளை நானும் என்னுடைய மனைவி சரிதாவும் செய்து வருகிறோம். அது மட்டும் இல்லாமல் எங்களுடைய மகன் உலகம் முழுவதும் நடைபெற்ற பல நீச்சல் போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்களை வென்று எங்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

அவனை ஒரு நடிகர் ஆக்குவதில் எனக்கும் என் மனைவிக்கும் விருப்பம் இல்லை. அவனுக்கு நீச்சல் துறையில் சாதிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. அதனால் அவருடைய ஆசையை நாங்கள் நிறைவேற்றுவோம். ஒவ்வொருவரும் தங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களும், சுற்றியுள்ளவர்களை மதிக்க, கவனிக்க வேண்டும் என்று கற்றுக்கொள்ளுங்கள். அதுமட்டுமில்லாமல் வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அவர்களையும் கவனித்துக்கொள்ள பிள்ளைகளுக்கு கற்றுக் கொள்ளுங்கள் என்று மாதவன் கூறியிருக்கிறார்.

Advertisement