சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு படத்தில் சாவர்க்கனாக ரன்தீப் ஹூடா மாறி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பங்கேற்றவர்களில் சாவர்க்கரும் ஒருவர். இவரை வட இந்தியாவில் வீர் சாவர்க்கார் என்று அழைப்பார்கள். மேலும், இவர் ஆங்கிலேயர்களால் 50 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றிருந்தார்.
ஆனால், இவர் மன்னிப்பு கடிதம் எழுதி 12 ஆண்டுகளில் வெளியே வந்து விட்டார். இதனால் பலரும் இவர் மீது கோபத்தில் இருந்தார்கள். இவர் இந்திய விடுதலை இயக்கம் 1857 என்ற நூலையும் எழுதி இருக்கிறார். அதோடு இவர் இந்து மகாசபையையும் உருவாக்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் காந்தியை கொலை செய்த வழக்கில் இவருக்கும் பங்கு இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்கள். இப்படி இவரை பலரும் வில்லனாகவே பார்த்தார்கள்.
சாவர்க்கர் குறித்த தகவல்:
சிலர் ஹீரோவாகவும் பார்த்தார்கள். இந்நிலையில் நேற்று சாவர்க்காரின் 140 வது பிறந்தநாள். இவருடைய பிறந்தநாள் அன்று பிரதமர் மோடி அவர்கள் புதிய பாராளுமன்றத்தை திறந்தது அனைவரும் அறிந்து ஒன்றே. இது குறித்து பலருமே விமர்சித்து எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். தற்போது சாவர்க்கரின் வரலாற்றை அடிப்படையாக வைத்து படம் எடுக்கப்பட்டு வருகிறது.
ரன்தீப் ஹூடா நடிக்கும் படம்:
அந்த படத்திற்கு ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர் என்று பெயரிடப்படுகிறது. இந்த படத்தில் ரன்தீப் ஹூடா கதாநாயகனாக நடிக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை அவரே இயக்குகிறார். மேலும், நேற்று சாவர்க்கரின் 140 ஆவது பிறந்தநாளில் இந்த படத்தினுடைய டீசரை பட குழு வெளியிட்டு இருந்தது. தற்போது இந்த படத்தின் உடைய டீசர் தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
ஆனந்த் பண்டிட் அளித்த பேட்டி:
இப்படத்தை ரன்தீப் ஹூடா ஃபிலிம்ஸ், ஆனந்த் பண்டிட் மோஷன் பிக்சர்ஸ், லெஜண்ட் ஸ்டூடியோஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆனந்த் பண்டிட் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் சாவர்க்கர் கதாபாத்திரத்தில் நடிக்க ரன்தீப் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து சொன்னது, இந்த படத்தில் சாவர்க்கர் கதாபாத்திரத்தில் ரன்தீப் நடிக்கிறார்.
ரன்தீப் குறித்து சொன்னது:
அந்தக் கதாபாத்திரத்தில் அவர் முழு ஈடுபாட்டுடனும் செயல்பட்டார். படப்பிடிப்பு முடியும் வரை அதாவது நான்கு மாதக்காலமும் அவர் தினம் ஒரு பேரீச்சம்பழம், ஒரு கிளாஸ் பால் மட்டுமே சாப்பிட்டு 26 கிலோ எடையைக் குறைத்தார். அதோடு இவர் சாவர்க்கரின் தோற்றத்திற்காகப் பாதி தலைக்கு மொட்டையும் அடித்தார் என்று கூறி இருக்கிறார்.