தமிழர்கள் வெளிமாநிலத்தில் இவ்வளவு அதிகாரம் பண்ண முடியுமா? அம்பத்தூர் விவகாரம் குறித்து மதுரை முத்து ஆதங்கம்.

0
341
Madurai
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மது போதையில் வட மாநில தொழிலாளர்கள் சிலர் போலீசாரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. சென்னை அம்பத்தூர் தொழில்பேட்டை பகுதியில் உள்ள வட்டாரவாக்கத்தில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி ஆயுத பூஜை கொண்டாட்டத்தின் போது குடிபோதையில் இருந்த வட மாநில தொழிலாளர்கள் இரண்டு பிரிவினர்களுக்கு மத்தியில் சண்டை ஏற்பட்டது. இந்த தகவலை அறிந்த ஆவடி காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர் அப்போது போலீஸ் வருடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர்கள் சிலர் அவர்களை தாக்கியதோடு காவலர்கள் வந்த வாகனத்தையும் சேதப்படுத்தினார்கள்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளான ரகுபதி என்ற காவலருக்கு தலையில் 3 தையல் போடும் அளவிற்கு காயம் ஏற்பட்டது. அதை அடுத்து சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்த போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 28 வட மாநில தொழிலாளர்களை கைது செய்தார்கள். பஞ்சம் பிழைக்க வந்த வட மாநில தொழிலாளர்கள் தமிழக போலீசாரை தாக்கிய இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் கண்டனத்திற்கு உள்ளானது.

- Advertisement -

மதுரை முத்து பதிவு :

இப்படி ஒரு நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பதிவிட்டுள்ள மதுரை முத்து ‘போலீசுக்கே இந்த நிலைமை என்றால் சாமானியன் நிலைமையை என்ன சொல்ல….. பிற்காலத்தில் நமது வாரிசுகளின் நிலைமை தான் என்ன? இந்த வட இந்தியர்களால்… நம்ம தமிழர்கள் வெளிமாநிலத்தில் இவ்வளவு அதிகாரம் பண்ண முடியுமா??? என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருப்பூரில், வட மாநில தொழிலாளர்கள் சிலர் தமிழக தொழிலார்களை தாக்கிய சம்பவத்தின் போது கூட மதுரை முத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

திருப்பூரில் நடந்த சம்பவம் :

அதில் ‘திருப்பூர் மாவட்டத்தில் வாடா மாநில இளைஞர்கள் 100 பேர் பெல்ட், கத்தி, மரக்கட்டை போன்றவற்றை வைத்துக்கொண்டு நம்முடைய தமிழ் இளைஞர்கள் விரட்டி அடிக்கும் கட்சியை பார்த்தேன். தொடக்கத்தில் சிறிய வேலை கேட்டு வந்தார்கள். பின்னர் 10 சதவிகிதம் இருந்தார்கள்.தற்போது திருப்பூரில் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை தற்போது 65 சதவிகிதமாக உள்ளனர். அணைத்து வேலையையும் இழந்து விட்டு ஊருக்கு வந்துவிட்டோம்.

-விளம்பரம்-

இப்போது குடி புகுந்த மக்கள் தமிழ் மக்களை விராட்டி அடிக்கும் அளவிற்கு இளைஞர்கள் அதுவும் தமிழ் இளைஞர்கள் அந்த அளவிற்கு விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். பாலாபிஷேகம் என இந்த வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் வட மாநிலத்தவர்கள் இன்னும் சில நாட்களில் நமக்கு பால் ஊத்திட்டு போக போகிறான். வேலை வாய்ப்பே இல்லாமல் இப்படியே சென்றால் பிட்சை எடுக்கும் கால காலகட்டத்திற்கு தமிழ் இளைஞர்கள் தள்ளப்படுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

எல்லா இடங்களிலும் வட மாநிலத்தவர்கள் :

ஏனெற்றால் சமீபத்தில் வாட்ஸ் ஆப்பில் பார்த்தேன், செட்டியார் தெரு, நாடார் தெரு, கவுண்டர் தெரு, தேவர் என இருதீர்கள் இனி வரும் காலகட்டங்களில் வடக்கன் தெரு என்று தான் வரப்போகிறது. வட மாநிலத்தவர்கள் இங்கே ரேஷன் கார்டு வாங்கி விட்டான். இதனை லேசான வீடியோ பதிவாக எண்ணவேண்டாம். மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நானும் பல ஹோட்டல்களில் தங்குகிறேன் நான் பர்த்தில் அதிகபட்சம் வட இந்தியர்களாக இறுகின்றனர்.

அடித்து விரட்டும் அளவிற்கு வந்து விட்டது :

நம்முடைய தமிழர்கள் நிலை எந்த அளவிற்கு என்று தெரியவில்லை. ஏனெற்றால் இன்ஜினியரிங் படித்துவிட்டு வீட்டுக்கு ஒருவர் இருக்கின்றார் ஆனால் வேலை கிடையாது. இதனை மிகவும் லேசாக நினைக்க வேண்டாம் வட மாநிலத்தவர்கள் விரட்டி அடிக்கும் காட்சியை பார்க்கும் போது அவ்வளவு சங்கடமாக இருந்தது. வட இந்தியில் ஒரு இடத்தில ஹிந்தி தெரியாமல் இரண்டு நாட்கள் தங்க முடியவில்லை. ஆனால் இங்கே அவர்களே நம்மை வெரைட்டி அடிக்கும் அளவிற்கு அசால்டாக இருக்கறோம். தமிழ் இளைஞர்கள் தயவு கூர்ந்து கவனத்தோடு விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம் இது என்பதை தயவுகூர்ந்து கேட்டுக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டு இருந்தார்.

Advertisement