6 தேசிய விருது வாங்கிய படம், மற்றும் விஜய்யின் சூப்பர் ஹிட் படத்தையும் மிஸ் செய்துள்ள மதுரை முத்து. அவரே சொன்ன காரணம்.

0
750
Vijay
- Advertisement -

சின்னத்திரையில் மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்பவர் மதுரை முத்து. இவர் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் அரசம்பட்டி என்ற ஊரில் பிறந்தவர். இவர் சிறு வயதில் இருந்தே மேடைப் பேச்சாளராக இருந்து இருக்கிறார். பின் இவர் பல மேடைகளில் பேசி மக்கள் மத்தியில் பிரபலமானார். அதோடு பல பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இவர் இருந்திருக்கிறார். அதன்பின் தொலைக்காட்சி சிரிப்புயாளராக மதுரை முத்து சின்னத் திரைக்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி வந்தார். கலக்க போவது யாரு, அசத போவது யாரு, காமெடி ஜங்ஷன் போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் மதுரை முத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்த பிரபலத்தின் மூலம் இவர் திரைப்படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்து இருக்கிறார். இருந்தும் சினிமாவில் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றவுடன் மதுரை முத்து சின்னத்திரை நோக்கி வந்து விட்டார்.

- Advertisement -

பெரிய படங்களில் நடிகை வாய்ப்பு :

இந்த நிலையில் தான் மதுரை முத்து சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டியில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் மற்றும் தனுஷ் படத்தில் தனக்கு வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் அதனை சில காரணங்களினால் மறுத்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். அதாவது கடந்த 2011ஆம் ஆண்டில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “ஆடுகளம்: படத்தில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்ததாம். தன்னுடைய வீட்டின் பக்கத்தில் தான் படப்பிடிப்பு நடந்ததாம்.

இந்த படம் தொடர்பாக வெற்றிமாறன் தன்னை பார்க்க நினைத்துள்ளார். மேலும் இயக்குனர் துறை செந்தில்குமாரிடம் சொல்லி அழைத்து வர சொன்னார். பின்னர் வெற்றிமாறனை சென்று பார்த்ததும் சில கோப்புகளை கொடுத்து அதனையே மதுரை மொழில் மாற்றம் செய்து கொடுக்க சொன்னார். ஆனால் நான் அதனை செய்ய மறுத்துவிட்டேன். ஆனால் ஆடுகளம் படம் தேசிய விருது வாங்கிய போது தனக்கு வருத்தமாக இருந்ததாக கூறினார்.

-விளம்பரம்-

நண்பன் படத்தில் வாய்ப்பு :

மேலும் இதே போன்று சுப்பிரமணியபுரம் படத்தில் நடிக்க அவர்கள் அழைத்தார்களாம். அதோடு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் இயக்கி விஜய் நடிப்பில் வெளியான “நண்பன்” படத்தில் விஜய் மற்றும் சூர்யா முக்கிய கதாபாத்திரங்களாக முடிவானபோது நடிக்க அழைத்தார்களாம். ஆனால் அந்த சமயம் தான் வெளியூரில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய நிலை இருந்ததால் அதனை மறுத்ததாக கூறினார் மதுரை முத்து.

ஆடுகளம் :

தனுஷ் மற்றும் டாப்சி பன்னு நடித்து இயக்குனர் வெற்றிமாறன் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேலும் இப்படம் 6 பிரிவுகளில் தேசிய விருதுகளை தட்டிச்சென்றது. அதே போல நண்பன் படம் இன்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் விரும்பமான ஒரு படமாக இருந்து வருகிறது. இந்நிலையில் மிகப்பெரிய நடிகர்களுடன் பணியாற்றும் வாய்ப்பை இழந்தது குறித்து மதுரை மனம் திறந்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement