அவருக்கு சூப்பர் ஹீரோ, இவருக்கு சுயசரிதை. விஜய் அஜித்துக்கு மாஃபியா பட இயக்குனர் கொடுத்த ரோல்.

0
7602
karthick-narean
- Advertisement -

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக நுழைந்து ஒரு கலக்கு கலக்கி கொண்டு இருப்பவர் கார்த்திக் நரேன். 2016 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த துருவங்கள் பதினாறு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த படம் ‘மாஃபியா’. இந்த படத்தில் கதாநாயகனாக வெளியாகி அருண் விஜய் நடித்து உள்ளார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து உள்ளார். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன் தயாரித்து உள்ளது. இந்த படத்தில் நடிகர் பிரசன்னா அருண் விஜய்க்கு வில்லனாக டிகே என்ற ரோலில் நடித்து உள்ளார். மாஃபியா படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கார்த்திக் நரேன் இயக்கிய இயக்கிய படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கார்த்திக் நரேன் சில படங்களை இயக்கியிருந்தாலும் விரைவாக மக்கள் மத்தியில் பிரபலமானர்.

-விளம்பரம்-
Image result for karthick naren mafia

இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் நரேன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் தொகுப்பாளர் பிரபல நடிகர்களின் பெயரை சொல்லி இவர்களுக்கு உங்களுடைய படத்தில் என்ன கதையில் நடிக்க சொல்வீர்கள் என்று கேட்டிருந்தார். அதற்கு அவர் கூறியது,
விஜய்– ஒரு சூப்பர் ஹீரோ கதையில் நடிக்க வைப்பேன்.
அஜித்– சுயசரிதை கதையில் நடிக்க வைப்பேன்.
விக்ரம்–அவரிடம் இருக்கும் திறமையை எந்த அளவிற்கு வெளிக்கொண்டு வர முடியுமோ அந்தளவிற்கு கதையில் நடிக்க வைப்பேன்.
தனுஷ்– இவரை வைத்து படம் பண்ண முடிவு செய்திருக்கிறேன். அது இந்த இடத்தில் சொன்னால் உங்களுக்கெல்லாம் தெரிந்திருந்து விடும் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களாக கலக்கிக் கொண்டிருப்பவர் அஜித்-விஜய். இவர்கள் இருவருக்குமே உலக அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தற்போது இவர்கள் இருவரும் பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஏற்கனவே விஜய் அவர்களின் தளபதி 65வது படத்தை இறுதிச்சுற்று இயக்குனர் சுதா அவர்கள் இயக்குவதாக உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கார்த்திக் நரேன் அளித்த பேட்டியைப் பார்த்து ரசிகர்கள் விஜய்யின் அடுத்த படத்தை அதாவது தளபதி 66 வது படத்தை கார்த்திக் நரேன் இயக்கினால் நன்றாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.

வீடியோவில் 14 நிமிடதிற்க்கு பின் பார்க்கவும்

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் கார்த்திக் நரேன் கூறிய கதாபாத்திரத்தில் விஜய்யும் , அஜித்தும் நடித்ததில்லை. ஒருவேளை கார்த்திக் நரேன் சொன்னது போல் விஜய்யும், அஜித்தும் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும், அடுத்த முறை இவர்கள் இருவரில் யாராவது ஒருத்தர் வைத்து கார்த்திக் நரேன் இயக்குவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement