விடாமுயற்சி படத்தில் அஜித் நடித்த ரோல் குறித்து இயக்குநர் மகிழ்திருமேனி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

தற்போது இவர் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஜெரினா கஸான்ட்ரா, அர்ஜுன், ஆரவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படம் முதலில் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி போனது. அனைவரும் எதிர்பார்த்த அஜித்தின் விடாமுயற்சி படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது.
விடாமுயற்சி படம்:
திரையரங்குகளில் ரசிகர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று விடாமுயற்சி படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க விடாமுயற்சி படத்தில் அஜித்தை மாஸாக பார்க்க முடியவில்லை என்று அவருடைய ரசிகர்கள் சிலர் வருத்தம் தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் இயக்குனர் மகிழ்திருமேனி, விடாமுயற்சி படத்தைப் பொறுத்தவரை அஜித் சார் அவருடைய இமேஜை பற்றி ஒரு இடத்தில் கூட கவலைப்படவே இல்லை.

மகிழ்திருமேனி படம்:
அவருடைய கதாபாத்திரத்திற்கு நேர்மையாக சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் எடுத்த மெனக்கடல் எனக்கு எப்பவுமே ஆச்சரியத்தை கொடுக்கிறது. நான் முதன்முறையில் அஜித் சாரை சந்திக்கும் போது ஒரு மாஸ் ஆக்சன் படமாக தான் எடுக்க வேண்டும் நினைத்தேன். ஆனால், அவர் சாதாரண மனிதனாக இருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னார். ஊரை காப்பாற்றுவது, நாட்டை காப்பாற்றுவது போன்ற கதை எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அந்த படம் எல்லாம் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும் என்றும் சொன்னார்.
அஜித் ரோல்:
நீங்கள் படம் நன்றாக பார்த்தீர்கள் என்றால், படம் முழுக்கவே அஜித் சார் அவருடைய ஸ்டார் அந்தஸ்தை விட்டு தான் நடித்திருப்பார். அதற்காக சில விஷயங்களை செய்திருக்கிறார். ஒரு சாதாரண மனிதன் சமூகத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை சந்திக்கும்போது அவர் எதிர்கொள்ளும் அவமானம், உறவுகளில் சிக்கல் ஆகியவற்றை எப்படி சமாளிக்கிறார்? அதற்கு எப்படி பதில் கொடுப்பார்? என்பதை சூழ்நிலைக்கு ஏற்ப அஜித் சார் பதில் கொடுத்திருக்கிறார். அஜித் சார் அவருக்கே உரித்தான இமேஜை கீழே சென்றாலும் அவர் அதைப் பற்றி கவலைப்படவில்லை.
https://www.youtube.com/watch?v=1ycYm-edUwI
அஜித் குறித்து சொன்னது:
எந்த ஒரு போலித்தனமும் இல்லாமல் இருக்க அஜித் சார் விரும்புகிறார். எப்போதுமே ஒரு மனிதரை நான் தொடர்ந்து கொண்டாடுகிறோம் என்றால் அவருடைய அருகில் சென்று பார்க்கும் போது சில குணங்கள் நமக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கும். ஆனால், அஜித் சாரிடம் நான் இரண்டு வருடங்களாக பழகி இருக்கிறேன். பொதுவெளியில் எப்படி இருக்கிறாரோ அப்படித்தான் நிஜ வாழ்க்கையிலும் அஜித் சார் இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்.






