மாஸ் ஹீரோக்கள் இல்ல, மாஸ் ஆக்ஷன் இல்ல, இருந்தும் ஆர்யாவின் கேரியர் பெஸ்ட்டாக அமைந்த படம். மகிழ் திருமேனி இயக்கிய அந்த படம்.

0
515
- Advertisement -

ஆர்யாவின் மீகாமன் படத்தை நெட்டிசன்கள் பாராட்டி வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மகிழ்திருமேனி. இவர் செல்வராகவன், கௌதம் மேனன் ஆகியவரிடம் உதவியாளராக பணிபுரிந்து இருந்தார். அதற்குப்பின் முன்தினம் பார்த்தேனே என்ற படத்தின் மூலம் தான் இவர் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பின்பு 2012 ஆம் ஆண்டு தடையறத் தாக்க என்ற படத்தை இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

பின் மீகாமன், தடம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களையும் கொடுத்திருந்தார். சமீபத்தில் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் கலகத் தலைவன். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்து இருந்தார்கள். உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், ஆரவ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். பிசாசு படத்தின் இசை அமைப்பாளர் அரோல் கரோலி இந்த படத்திற்கு
இசையமைத்திருக்கிறார்.

- Advertisement -

மீகாமன் படம்:

தில்ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். மேலும், இந்த படம் கலையான விமர்சனத்தை பெற்றிருந்தது. ஆனால், இதற்கு முன் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே நல்ல ஹிட் கொடுத்திருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மீகாமன் படம் நல்ல கதை அம்சத்தை கொண்ட படம். இந்த படத்தில் ஆர்யா, ஹன்சிகா, அஷுதோஷ் ராணா, அனுபமா குமார், ரமணா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

படத்தின் கதை:

இந்த படம் 2014 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. படத்தில் இந்தியாவின் பெரிய போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவனை பிடிக்க போலிஸ் அதிகாரியான ஆர்யா அந்த கும்பலில் ஒருவராக சேர்கிறார். அப்போது கடல் வழியாக விலை மதிப்பில்லாத 1000 கிலோ போதை மருந்து இந்தியாவிற்கு வருகிறது. இந்தியாவில் தன் போதை சாம்ராஜ்யத்தை ஆள நினைக்கிறார் போதைகடத்தல் தலைவன். அப்போது அந்த கும்பலை பிடிக்க முயலும் போது ஆர்யாவின் நண்பர் இறந்து விடுகிறார்.

-விளம்பரம்-

பட தோல்விக்கு காரணம்:

பின் அந்த கும்பலை பிடிக்கும் முயற்சியில் ஆர்யா இறங்குகிறார். இறுதியில் ஆர்யா அந்த கும்பலை பிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படம் விக்ரம், கைதி போன்ற படங்களை போன்று போதை பொருள் கடத்தல், மாஃபியா கான்செப்டை வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது. ஆனால், விக்ரம் ,கைதி போன்ற படங்களில் இருந்த பெரிய ஹீரோக்கள், அதிரடி ஆக்சன் காட்சிகள் எல்லாம் மீகாமன் படத்தில் இல்லை.

பாராட்டி வரும் நெட்டிசன்கள்:

இதனாலே இந்த படம் திரையரங்களில் ஓடவில்லை. ஆனால், கதைகளம் அருமையாக இருந்தது. அதற்கு பின் இந்த படத்தை பார்த்து பலருமே பாராட்டி இருந்தார்கள். சொல்லப்போனால், ஆர்யாவின் திரை பயணத்திலேயே இந்த படம் ஒரு முக்கிய படம் என்று சொல்லலாம். ஆனால், ஆர்யாவிற்கு இந்த படத்திற்காக எந்த ஒரு பாராட்டும், விருதும் கிடைக்கவில்லை. தற்போது இந்த படத்தை குறித்து ரசிகர்கள் பலருமே பாராட்டி வருகிறார்கள்.

Advertisement