கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்த மகாலக்ஷ்மியின் முதல் கணவருக்கு பிறந்த மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி . இவர் நடிகை மட்டும் இல்லாமல் பல நிகழ்ச்சிகளில் ஆங்கர் ஆகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான்.படிப்பு முடிஞ்சதும் இவர் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக மீடியாவிற்குள் நுழைந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இவர் அரசி என்ற சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதற்கு பின் மகாலட்சுமி 10 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முத்திரையைப் பதித்து வருகிறார். இதனிடையே இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அனில் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு சச்சின் என்ற ஆறு வயது மகனும் இருக்கிறார். இப்படி ஒரு சூழ்நிலையில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணமாக அனில்- மகாலட்சுமி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
தன்னுடைய மகனுடன் மகாலட்சுமி தனியாக தான் வாழ்ந்துவந்தார். பின் தொடர்ந்து மகாலட்சுமி சீரியல் நடித்து வருகிறார். சன் டிவி, ஜீ தமிழ் என பிரபலமான சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகிறார்.இடையில் சீரியல் நடிகர் ஈஸ்வரனுடன் மகாலட்சுமி தொடர்பு இருப்பதாக ஈஸ்வரனின் மனைவி ஜெயஸ்ரீ புகார் அளித்திருந்தார். இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பியிருந்தது.
அப்போது கூட மகாலட்சுமியின் முதல் கணவர் அனில் செய்தியாளர்களை சந்தித்து தங்களோடு திருமண வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதற்குப்பின் மகாலட்சுமி தன்னுடைய கேரியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் மகாலட்சுமி இரண்டாவது ஆக தயாரிப்பாளர் ரவீந்திரதை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மேலும், இவர்களுடைய திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்ததை விட பலரும் விமர்சனம் தான் செய்திருந்தார்கள்.
இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்ற தந்தையர் தினத்தை முன்னிட்டு மகாலக்ஷ்மி தனது தந்தை மற்றும் மகனுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். ரவீந்தரை திருமணம் செய்த பின்னர் பேட்டி ஒன்றில் பேசிய மகாலக்ஷ்மி தன்னுடைய முன்னாள் கணவர் குறித்துபேசி இருந்தார். அதில்’ என் முன்னாள் கணவருக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் ஆகிவிட்டது.
ஆனால், இது பலருக்குமே தெரியாது. அவர் இப்போது தனக்கான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதை நினைத்து எனக்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. நான் முதலில் கல்யாணமே வேண்டாம் என்று தான் நினைத்தேன். இருந்தாலும், என் மகன் சச்சினுக்காக நல்ல மனிதரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்தேன். கடைசியில் அது நடந்தது. எனக்கு ரவீந்திர் கிடைத்தது நான் செய்த பாக்கியம் என்று கூறியிருந்தார்.