லியோ படத்துக்கு எழுந்த புதிய சிக்கல் – லியோ காபி நிறுவன இயக்குனரின் புதிய குற்றச்சாட்டு

0
1852
Leo
- Advertisement -

விஜய்யின் லியோ படம் டைட்டில் காபி நிறுவனத்தின் பெயர் என்ற புது சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் எழுந்து இருக்கிறது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது படங்களும் இல்லாமல் கோடிக்கணக்கில் சம்பாதித்து சாதனை படைத்து வருகிறது. ஆரம்பத்தில் இவர் ஒரு தனியார் வங்கியில் தான் வேலை செய்து வந்தார்.

-விளம்பரம்-

பின் இவர் சினிமா மீது இருந்த ஆசையால் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய திரை பயணத்தை தன்னுடைய நண்பருடன் இணைந்து 80 ஆயிரம் ரூபாய் பண செலவில் ஒரு “களம்” என்ற படத்தின் மூலம் தான் தொடங்கினார். அந்த குறும்படத்தை கார்த்திக் சுப்புராஜின் “அவியல்” குறும்பட தொகுப்பு திரைப்படத்தின் மூலம் வெளியிட்டார். பின் “மாநகரம்” என்ற படத்தை லோகேஷ் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

- Advertisement -

லோகேஷ் திரைப்பயணம்:

இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்சஸை கார்த்தி நடித்த “கைதி” படத்தின் மூலம் தொடங்கினார். அதற்கு பிறகு வந்த மாஸ்டர், விக்ரம் என பெரிய நடிகர்களை வைத்து பிரம்மாண்ட அளவில் ஹிட் கொடுத்து இருக்கிறார். இதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ். இப்படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

லியோ படம் :

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். மேலும், இப்படத்தில் விக்ரம் பட நடிகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதோடு மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-

லியோ பட டைட்டில் குறித்த சர்ச்சை:

இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் விஜய்யின் லியோ பட டைட்டில் குறித்த சர்ச்சை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் பெயர் பல வருடங்களாக இயங்கி வரும் லியோ காபி நிறுவனத்தின் பெயர். லியோ பில்டர் காபி நிறுவனம் 1910 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இதன் கிளைகள் சென்னையில் மயிலாப்பூர், அசோக் நகர் போன்ற பகுதிகளில் இருக்கிறது.

நிர்வாக இயக்குனர் வேணு சீனிவாசன் அளித்த புகார்:

தற்போது இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வேணு சீனிவாசன், லியோ பெயருக்கான காப்புரிமை எங்களிடம் இருக்கிறது. படத்திற்கு டைட்டில் வைக்கும் முன் எங்களிடம் எந்தவிதமான அனுமதியும் வாங்கவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், லியோ என்ற பெயர் உங்களுக்கு மட்டும்தான் சொந்தமா? அப்படி என்றால் லியோ என்று பெயர் வைத்த அனைவருமே உங்களிடம் பர்மிஷன் வாங்கணுமா? என்றெல்லாம் கிண்டல் செய்து வருகிறார்கள். இன்னும் சிலர், படத்திற்கு இந்த செய்தி இலவச பிரமோஷன் என்று கூறுகிறார்கள். சொல்லப்போனால், விஜயின் லியோ பட டைட்டில் வந்த பிறகு தான் இந்த மாதிரி ஒரு காபி நிறுவனம் இருப்பதே தெரிய வந்திருக்கிறது.

Advertisement