விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜயின் தாத்தா, பொய் சொல்லி காவிரியையும் விஜய்யும் பிரித்து வைத்திருப்பது எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. காவிரி இங்கே இருந்திருந்தால் கூட அவளுக்கு பழைய ஞாபகம் வந்திருக்கும். ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று தன் மனைவியின் போட்டோ முன்பு நின்று புலம்பி கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் விஜய், தன்னுடைய மகளின் அட்மிஷனுக்காக ஸ்கூலுக்கு சென்று இருந்தார். இன்னொரு பக்கம் காவேரி காஞ்சிபுரத்திற்கு கிளம்புவதால் எல்லாம் பேக் செய்து கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த டிரைவர், விஜய் என்ற பெயரை சொல்லி பேசிக் கொண்டிருந்தார். விஜய் என்ற பெயரை கேட்ட உடனே காவிரிக்கு ஏதேதோ ஞாபகங்கள் வருகிறது. காவிரி ஒரு நிமிடம் அமைதியாகவே நின்று விட்டார். பின் தன் அம்மாவிடம் காவிரி, விஜய்ன்னு எனக்கு யாராவது தெரியுமா? அவரை நான் பார்த்திருக்கிறேனா? அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்றெல்லாம் கேட்டார். சாரதாவல் எதுவும் பேச முடியவில்லை. பின் காவிரி, அந்த பெயரை கேட்டால் எனக்கு என்னென்னவோ நினைவுகள் வருகிறது என்றார். இருந்தாலும் சாரதா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
மகாநதி:
காவேரி- சாரதா இருவரும் காஞ்சிபுரத்திற்கு வந்து விட்டார்கள். பின் தங்களுடைய புது வீட்டிற்கும் சென்று விட்டார்கள். காவிரி பள்ளிக்கூடத்திற்கு நேரம் ஆகிறது என்று தயாரானார். இன்னொரு பக்கம் விஜய் தன்னுடைய மகளை தயார் செய்து பள்ளிக்கூடத்திற்கு அழைத்து வந்தார். விஜய்- காவிரி இருவரும் பள்ளிக்கு வந்தார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் சந்திக்கவே இல்லை. பின் காவிரி, தன் குழந்தை தான் என்று தெரியாமல் அம்முவிடம் பேசி இருந்தார். பின் விஜய் அழைத்தால் அம்மு சென்று விட்டார்.

இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் விஜய் தன்னுடைய மகளை பள்ளியில் விட்டு சென்று விடுகிறார்.
அம்மு அழுது கொண்டே இருக்கிறார். அப்போது வந்த காவேரி, அம்முவிற்கு ஆறுதல் சொல்லி நான்தான் உனக்கு கிளாஸ் டீச்சர் என்று அறிமுகம் செய்து கொள்கிறார். இன்னொரு பக்கம் விஜய், தன் மகள் எப்படி இருப்பாள் என்று கவலையில் இருக்கிறார். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த காவிரி, அம்முவுடன் பேசியதை பற்றி எல்லாம் தன் அம்மாவிடம் சொல்லி சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார்.
https://www.youtube.com/watch?si=nTJyLGzPl0NecSJS&v=FutnJo6ipcc&feature=youtu.be
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் குழந்தை காவேரி அம்மு, தன் தந்தையை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு அழுகிறார். அப்போது காவிரி, அம்முவை சமாதனம் செய்து சிரிக்க வைக்கிறார். அது மட்டும் இல்லாமல் அமுவிற்கு காவிரியை ரொம்ப பிடித்து விடுகிறது. அதற்குப்பின் பள்ளி முடித்து வெளியே வந்த அம்மு, தன்னுடைய அப்பாவிடம் காவிரியை பற்றி ரொம்ப பெருமையாக பேசுகிறார். இதனால் விஜய், உங்கள் டீச்சரை சந்தித்து நன்றி சொல்லலாம் என்கிறார். இன்னொரு பக்கம் காவிரி, அம்முவை பற்றி ரொம்ப சந்தோசமாக சாரதாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்






