விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன், எதற்கு என் கடையில் வைக்கிறார் என்றெல்லாம் சொல்லி கார்த்திகேயனை அங்கிருந்து அனுப்பி விட்டார். பின் அரசி தனியாக நடந்து வந்திருப்பதை பார்த்து கார்த்திகேயன் உங்களுக்கு எந்த பொருள் வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள். நான் வீட்டுக்கு கொண்டு வந்து தருகிறேன். அந்த கடையில் வாங்க வேண்டாம் என்றெல்லாம் சொன்னார். அரசி, தன்னுடைய கடை தான் என்று சொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் எப்படியோ ஏதேதோ சொல்லி அரசி போன் நம்பரையும் கார்த்திகேயன் வாங்கிக் கொண்டார்.

அஞ்சலியின் வீட்டிற்கு சென்ற பாக்கியம் ரொம்ப மோசமாக அஞ்சலியையும் அவருடைய குடும்பத்தையும் பேசினார். அக்கம் பக்கத்தில் எல்லோருமே அஞ்சலியின் குடும்பத்தை குடும்பத்தை தவறாக புரிந்து கொண்டார்கள். அஞ்சலி சொல்ல வருவதை கூட கேட்காமல் பாக்கியம் ரொம்பவே தவறாக பேசி விட்டார். இதையெல்லாம் கேட்ட அஞ்சலியின் அப்பா அம்மா வருத்தப்பட்டார்கள். பின் அஞ்சலி, நான் கோயிலில் சரவணனை எதர்ச்சியாக பார்த்தேன். ஆனால், அவர்கள் தான் தவறாக புரிந்து கொண்டு பேசுகிறார்கள் என்று அழுதார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அதற்குப்பின் சரவணன், பாண்டியன் இருவரும் கடையில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்து அஞ்சலியின் அப்பா, பாண்டியனிடம் பாக்கியம் வீட்டிற்கு வந்ததையும், சரவணன்-அஞ்சலி இருவரும் சந்திப்பதை பற்றி ரொம்ப மோசமாக பேசிய விஷயத்தை எல்லாம் சொல்லி வருத்தப்பட்டார். இனிமேல் உங்கள் பையன் என் மகளை சந்திக்கக்கூடாது என்றார். இதை கேட்டு ஆத்திரமடைந்த சரவணன் பைக்கை எடுத்துக் கொண்டு பாக்கியத்தின் வீட்டிற்கு கிளம்பினார். பாண்டியன் தடுத்துமே சரவணன் கேட்கவில்லை.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மயிலின் வீட்டிற்கு வந்த சரவணன் பயங்கரமாக கத்துகிறார். பாக்கியம், நான் சண்டை போட்டது எல்லாம் உன்னிடம் சொல்லிவிட்டாளா, என் மகளின் குடியை கெடுத்தவர் என்றெல்லாம் அஞ்சலியை மீண்டும் மீண்டும் ரொம்ப மோசமாக பேசுகிறார். சரவணன் எவ்வளவு சொல்லியுமே பாக்கியம் கேட்கவில்லை. தங்கமயிலும் தன் அம்மாவை திட்டுகிறார். இருந்தாலும் பாக்கியம் சரவணன்-அஞ்சலி இருவரையும் சேர்த்து வைத்து ரொம்ப மோசமாக பேசுகிறார். இதனால் கொந்தளித்த சரவணன் ஒரு கட்டத்தில் கல்லை தூக்கி பாக்யாவின் மண்டையில் போட போகிறார்.

சீரியல் ட்ராக்:
அந்த சமயம் வந்த கதிர், சரவணனை தடுத்து அங்கிருந்து அழைத்து செல்கிறார். பின் தங்கமயில், என் பிரச்சினையை நான் பார்த்துக் கொள்கிறேன். தேவை இல்லாமல் யாரும் தலையிடாதீர்கள் என்று தன்னுடைய அப்பா, அம்மாவிடம் சண்டை போடுகிறார். இதனால் மயிலுக்கு உடல்நிலை சரியில்லாமல் மயங்கி கீழே விழுந்து விடுகிறார். இன்னொரு பக்கம் சரவணன், நான் எந்த தவறும் செய்யவில்லை. நாங்கள் எதர்ச்சியாக தான் கோயிலில் பார்த்தோம். எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று கதிரிடம் சொல்லி ரொம்ப எமோஷனாக அழுகிறார்.






