விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதா, அவருடைய பொண்ணு அம்மு நீ பள்ளிக்கூடத்திற்கு வராததால் ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று அடம்பிடித்து கொண்டு இருந்தார். உன்னை பார்க்க வேண்டும் என்று அம்மு ஆசைப்படுகிறார். அதனால் அவர் மகளை அழைத்து வருவதற்கு நான் சம்மதம் சொல்லிவிட்டேன் என்றார். விஜய்யும் தன் மகளை அழைத்துக் கொண்டு வர சென்று இருந்தார். காவிரிக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. தன் கனவில் வந்தவர் நிஜத்தில் வருவது எப்படி என்று காவிரி யோசித்துக் கொண்டிருந்தார்.

தாத்தா, விஜய்யிடம் ரொம்ப எமோஷனலாக பேசி மன்னிப்பு கேட்டார். விஜய், காவிரியை நான் பார்த்தேன். ஆனால், அவளுக்கு பழைய ஞாபகம் இல்லை என்றார். பின் விஜய், அம்முவை தயாராக சொன்னார். இன்னொரு பக்கம் சாரதா தடபுடலாக விருந்து சமைத்துக் கொண்டிருந்தார். காவிரிக்கு ஒன்றுமே புரியவில்லை. பின் விஜய்- அம்மு இருவரும் காவிரி வீட்டுக்கு வந்து விட்டார்கள். காவிரியை பார்த்தவுடன் அம்மு ரொம்ப சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தார். இதை பார்த்து சாரதா-விஜய் இருவரும் சந்தோஷப்பட்டார்கள்.
மகாநதி:
சாரதா, விஜய்- அம்மு இருவருக்குமே பார்த்து பார்த்து சாப்பாட்டை பரிமாறினார். அம்மு கட்டாயப்படுத்தியதால் தான் காவிரியும் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டார். அதற்கு பின் விஜய், காவிரியின் மெடிக்கல் ரிப்பீட்டை கொடுங்கள். எனக்கு தெரிந்த டாக்டரிடம் பேசுகிறேன் என்று சொல்வதால் சாரதாவும் கொடுத்தார். அதற்குப்பின் காவிரியை கோயிலுக்கு அழைத்து செல்ல சொல்லி சாரதா கேட்டார். விஜயும் சரி என்றார். காவிரி அழகாக புடவையில் வந்தார். அதை பார்த்து விஜய் மெய் மறந்து இருந்தார். பின் காவேரி, அம்மு, விஜய் மூவரும் ஒன்றாக காரில் சேர்ந்து செல்வதை பார்த்து சாரதா சந்தோஷப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், காவிரியை கோவிலில் விட்டு காத்திருப்பதாக சொல்கிறார். காவிரி, அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை. நானே வீட்டிற்கு போகிறேன் என்கிறார். அதற்கு பின் வீட்டிற்கு வந்த காவிரி, எதற்காக அவருடன் அனுப்பி வைக்கிறீர்கள்? எனக்கு அதில் விருப்பமே கிடையாது என்று தன் அம்மாவை திட்டுகிறார். அதற்குப்பின் சாரதா, கங்கா- யமுனாவிற்கு போன் செய்து விஜய் உயிருடன் இருக்கும் விஷயத்தை சொல்கிறார். எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
அதற்குப் பின் விஜய், காவிரியின் மெடிக்கல் ரிப்போர்ட்டை தனக்கு தெரிந்த டாக்டரிடம் காண்பிக்கிறார். அவர் சீக்கிரமாகவே காவிரியை குணப்படுத்திவிடலாம் என்று நம்பிக்கை கொடுக்கிறார். மறுநாள் அம்மு, விஜய் இருவரும் காவிரியின் வீட்டிற்கு வருகிறார்கள். காவிரிக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏன் அம்மா இப்படி நடந்து கொள்கிறார்? என்று சந்தேகப்படுகிறார். பின் விஜய், அம்முவிற்கு சாரதா தடைபடலாக சமைக்க செல்கிறார்.






