‘இப்பயும் நடிப்பு வரல’ – கேலிக்கு உள்ளான ரஜினி,விஜய் பட நடிகையின் முதல் ஆடிஷன் வீடியோ.

0
434
- Advertisement -

நடிகை மாளவிகா மோகனன் நடிப்பு பயிற்சியில் நடித்த முதல் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாள சினிமாவில் கடந்த 2013ஆம் ஆண்டு நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த “பட்டம் போலெ” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ரஜினியின் சூப்பர் ஹிட் படமான “பேட்ட” படத்தில் மாளவிகா மோகனன் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

அதுவும் பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகாவை பலரும் வயதான நடிகை என்று தான் ஆரம்பத்தில் நினைத்து இருந்தார்கள். ஆனால், அம்மணியின் போட்டோ ஷூட்டை பார்த்து தான் இவர் இளம் கவர்ச்சி புயல் என்று பலருக்கும் தெரிந்தது. அதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் மாளவிகா மோகனன் நடித்து இருந்தார். இந்த படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது.

- Advertisement -

மாளவிகா மோகனன் திரைப்பயணம்:

மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று சாதனை படைத்த நிலையில் இவருக்கு பிரபலமும் கூடியது. பின் இவர் நடிகர் தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து இருக்கும் தங்கலான் படத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் கன்னட சினிமாவில் வெளியான சூப்பர் ஹிட் படமான கே ஜி எஃப் படத்தின் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மாளவிகா மோகனன் நடிக்கும் படங்கள்:

மேலும் இப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கி இருக்கிறது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இப்படம் மட்டுமில்லாமல் பாலிவுட் சினிமாவில் “யுத்ரா” என்ற படத்திலும் நடிகை மாளவிகா மோகன் நடித்து இருக்கிறார். பின் இவர் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் நடித்து வருகிறார். கிறிஸ்டி என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

மாளவிகா மோகனன் வீடியோ:

இந்த படத்தை ஆல்வின் ஹென்றி இயக்கி ராக்கி மெளண்டைன் சினிமாஸ் சார்பில் சஜை செபாஸ்டியன் மற்றும் கண்ணன் சதீசன் இணைத்து தயாரிக்கின்றனர். இந்நிலையில் தற்போது மாளவிகா மோகனுடைய பழைய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் மாளவிகா மோகனன் அவர்கள் முதன் முதலாக கே என் கே ஆக்டிங் இன்ஸ்டியூட்டில் நடிப்பு பயிற்சி சேர்ந்து இருந்தார்.

நெட்டிசன்கள் ட்ரோல்:

அப்போது அவர் முதன்முதலாக நடித்த வீடியோ. அதில் அவரின் நடிப்பு படுமோசமாக இருந்தது. இதை பார்த்து பலருமே கிண்டல் செய்து செய்து வருகிறார்கள். சிலர் இன்னும் இவருக்கு இன்னும் நடிக்கவே தெரியவில்லை. சொல்லப்போனால், அவருக்கு நடிப்பு வரவில்லை என்றெல்லாம் கேலி செய்து வருகிறார்கள்.

Advertisement