அந்த 105 நாட்கள், எனக்கு ஒரே ஒரு ஆசை – பிக் பாஸுக்கு பின் மாயா பதிவிட்ட பதிவு.

0
477
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் பைனல்கடந்த ஞாயிற்று கிழமை கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா சீசனில் ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், அன்னயா, ரவீனா, விசித்திரா, பூர்ணிமா ரவி ஆகியோர் வெளியேறி இருந்தனர்.

-விளம்பரம்-

இறுதியில் இறுதி போட்டிக்கு பிக் பாஸ் வீட்டில் விஷ்ணு, மாயா, மணி, தினேஷ், அர்ச்சனா ஆகிய ஐந்து பேர்தகுதி பெற்று இருந்தனர். இதில் Ticket To Finale மூலம் விஷ்ணு ஏற்கனவே பைனலுக்கு தகுதி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இறுதியில் முதல் ஆளாக விஷ்ணு வெளியேற அவரை தொடர்ந்து தினேஷ் வெளியேறினார். இப்படி விஷ்ணு மற்றும் தினேஷ் இருவரும் வெளியேற அர்ச்சனா, மணி, மாயா மட்டும் மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.

- Advertisement -

மாயாவும் சர்ச்சையும் :

இதனை தொடர்ந்து அர்ச்சனாவிற்கு முதல் இடமும் மணிக்கு இரண்டாம் இடமும் கிடைத்து இருந்தது. இதில் அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனதை விட மாயா வெளியேற்றப்பட்டதை தான் பலரும் கொண்டாடி இருந்தனர். அதிலும் எந்த red cardஐ கொடுத்து மாயா பிரதீப்பை அனுப்பினரோ அதே red card கட்டத்திற்குள் மாயா நின்று மாயா வெளியேற்றப்பட்டார் என்றெல்லாம் கூறி வருகின்றனர்.

மாயா வெளியேற்றப்பட்ட பின்னர் அவர் பேசிய போது ‘முன்னாடியே சொன்ன மாதிரி நான் ஏற்கெனவே வின்னர்தான். இப்படியான மக்களை நான் சம்பாதிச்சுட்டேன்”. என கரவொலிகள் எழும்பிய ரசிகர்களை நோக்கி கூறியவர் ,” பிக் பாஸ் வீட்டுக்குள்ள நான் அவ்ளோ நட்பை சம்பாதிச்சு வச்சிருக்கேன். விக்ரமின் தன்னம்பிக்கை ரொம்பவே முக்கியம். யார் என்ன சொன்னாலும் விக்ரம் நினைச்ச மாதிரி அவன்தான் பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.

-விளம்பரம்-

மாயாவின் பைனல் பேச்சு :

இந்த மாதிரி போட்டியாளர்கள் அனைவரும் இந்த வெற்றியை உரிமை கொண்டாடணும். பூர்ணிமா நான் நன்றி சொல்லியாகணும். துயரம்னு சொல்றதுக்கு முன்னாடியே என் கையைப் பிடிச்சு தட்டிக் கொடுப்பாங்க. பூர்ணிமாவோட தன்னம்பிக்கையையும், அன்பையும் பார்த்து நான் வியந்திருக்கேன். அவங்களும் இந்த 16 லட்சத்தோட இந்த வெற்றியையும் உரிமை கொண்டாடணும்.” என்றவர் கமலை நோக்கி ” உங்ககூட நான் நிக்குறேன். நான் வின்னர்தான் சார்” என கூறினார்.

இப்படி ஒரு நிலையில் மாயா பதிவிட்டுள்ள பதிவில் , “  என் மீது அன்பைப் பொழிந்ததற்கும், என் குறைகளை ஏற்றுக்கொண்டதற்கும், என் போர்களில் போராடியதற்கும் நன்றி. அன்பு மழைல நனைய வெச்சிட்டிங்க. எனது மரியாதையும் நிபந்தனையற்ற அன்பும் இறுதிவரை என் இதயத்தில் இருக்கும். அந்த 105 நாட்கள், மரணப் படுக்கையிலும் மறக்காது. இனி உங்களுக்காகத்தான் வேலை பார்க்கப்போறேன். நீங்கள்  என்றென்றும் என்னுடன் இருக்க வேண்டும். 

எனக்கு ஒரே ஒரு ஆசை :

என்னுடைய  போர்க்களத்தில் என்னுடன் இருந்ததற்காக கடைசி வரை நன்றியுடன் இருப்பேன். எனக்கு ஒரே ஒரு ஆசை. என்னுடைய  ரசிகர்களாக நீங்கள்  இருந்தால்  என்னை மட்டும் ரசியுங்கள், மற்றவர்களையும் ரசியுங்கள் ஆனால், ஒருவரை வெறுக்காதீர்கள். என்னை வெறுப்பவர்களாக இருந்தாலும் கூட அவர்களை  வெறுக்க வேண்டாம் , வேணும்-னா  காதலிங்க. போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார்  தூற்றட்டும்.  போய் நம்ம வேலையைப்  ஸபார்க்கலாம். சத்தியமா – சந்திப்போம்” என்று பதிவிட்டிருக்கிறார். 

Advertisement