இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின் சித்திக், மகேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் கதாநாயகிகளாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும், சசி குமாரின் ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் அறிமுகமாகும் இவர் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம்இறங்கினர்.
இந்த படத்தில் சசி குமாரின் மனைவியாக குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தார் மாளவிகா. தற்போது நடித்து வரும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிடுவார்.சமீபத்தில் இவர் விஜய்யுடன் வீடியோ காலில் பேசி இருந்தது பெரும் வைரலாக பேசபட்டது.
இதையும் பாருங்க : ஸ்ரீதேவி துவங்கி வைத்த தொழில் – சினிமாவில் இருந்து விலகிய மஹேஸ்வரி என்ன செய்கிறார்.
நேற்று இளைய தளபதி விஜய் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதை அடுத்து பல்வேறு பிரபலங்களும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் விஜய் குறித்து பதிவிட்டதோடு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அந்தவகையில் மாளவிகா மோகனன் நேற்று விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில், நான் விஜயை முதல்நாள் சந்திக்கும்போது மாஸ்டர் படத்தின் பூஜை நடைபெற்றது. நான் மிகவும் குதூகலமாகவும் கொஞ்சம் படபடப்பாகவும் இருந்தேன். ஆனால் அன்றைய தினம் எங்களுக்கு பெரிதாக பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனால், ஆறு மாதம் கழித்து அவரைப் பற்றி கொஞ்சம் தெரிந்து பின்னர் அவர் என் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒரு மனிதராக மாறி விட்டார். அவர் மிகவும் அன்பானவர் அக்கறையான அவர் மிகவும் தயிர்சாத விரும்பி. என்னுடைய நான்கு மணி தோழர் ஆனால் அவர் விரைவில் தூங்கி விடுவார் என்பதை தவிர. எல்லா தருணத்திலும் அவர் நல்லதை மட்டுமே பார்ப்பார். அவர் மிகவும் கொஞ்சமாகத்தான் பேசுவார் ஆனால் தாம் செல்லும் வார்த்தைகளிலும் அவர் கொடுக்கும் சக்தி எங்களிடம் காப்பாற்றும் ஒரு நபர் இப்படி ஒரு அன்பான மனிதரை இனி உருவாக்க முடியாது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் மிஸ்டர் தளபதி அனைத்துக்கும் மாஸ்டர் என்று பதிவிட்டிருக்கிறார்