நாகர்கோவில் பகுதியில் கடந்த சில வாரங்களாக மலையாள படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குநர், உதவியாளர்கள் செட்டிகுளம் சந்திப்பில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கியுள்ளனர்.
இவர்கள் தினமும் காலையில் படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டு இரவில் லாட்ஜிக்குத் திரும்புவார்கள். வழக்கம்போல நேற்று இரவு படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர், நடிகைகள் லாட்ஜிக்குத் திரும்பினார்கள். அப்போது அறையின் படுக்கை விரிப்பு சரி இல்லாததால்
லாட்ஜ் ஊழியர்களிடம்நடிகை மஞ்சு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படியுங்க : காதலனுடன் ஹோட்டல் ரூமில் அயிட்டம் டான்சர் செய்த செயல்.! பதறி ஓடிய ரூம் பாய்..! இவங்களா இப்படி..!
லாட்ஜிக்கு கட்ட வேண்டிய வாடகை பாக்கி 60,000 ரூபாயை தாருங்கள் என லாட்ஜ் ஊழியர்கள் கேட்டுள்ளனர். அதற்கு நடிகை லாட்ஜிலிருந்து கிளம்புவதாகக் கூறி லக்கேஜ்களுடன் அங்கிருந்து புறப்பட முயன்றார். லாட்ஜ் ஊழியர்கள் உங்கள் படக்குழுவினரிடம் இருந்து வாடகை பாக்கியை வாங்கிக் கொடுத்துவிட்டு இங்கிருந்து கிளம்புங்கள் எனக் கூறினர்.
ஒரு கட்டத்தில் நடிகை அழுது ஆர்ப்பாட்டம் செய்தார். இதுகுறித்து லாட்ஜ் ஊழியர்கள் கோட்டார் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் படக்குழுவினர் லாட்ஜ் வாடகை பாக்கியைக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டனர். அதையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது.