இன்னோரு தடவ அப்படி கூப்பிட்ட முத்தம் குடுத்துடுவேன் – நதியாவை மிரட்டிய நடிகர்

0
281
- Advertisement -

முத்தம் கொடுப்பேன் என்று நடிகை நதியாவை மலையாள நடிகர் மிரட்டி இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் 80, 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நதியா. இவருடைய பூர்வீகம் கேரளா. இவர் 1984 ஆம் ஆண்டில் பாசில் தனது நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு என்ற திரைப்படத்தில் நதியாவை அறிமுகப்படுத்தினார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் மோகன்லால் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

அதனை தான் தமிழில் பூவே பூச்சூடவா என்ற பெயரில் பாசில் ரீமேக் செய்தார். இந்த படம் வெளியாகும் முன்பே மலையாளத்தில் நதியா பல படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப் படத்தின் மூலம் தான் அறிமுகமானார். முதல் படத்திலேயே நதியா ஆண்களின் மனதில் மட்டுமின்றி பெண்கள் மத்தியிலும் பிரபலமானார். மேலும், நதியாவின் கண்ணியமான தோற்றம், துடிப்பான நடிப்பு, நவநாகரிக உடைகள், ஹேர் ஸ்டைல் என அனைத்தும் பெண்கள் மத்தியில் பேசு பொருளானது.

- Advertisement -

நடிகை நதியாவின் திரைப்பயணம்:

அதுமட்டும் இல்லாமல் 90 காலகட்டத்தில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லித் தான் பொருள் விற்பார்கள். அந்த அளவிற்கு நதியா மிக பிரபலமான நடிகையாக இருந்தார். பின் இடையில் இவர் சினிமாவில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்து கொண்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலக்ஷ்மி என்ற திரைப்படத்தின் மூலம் நதியா மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த படம் விமர்சன, வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

மலையாள மொழி நிகழ்ச்சியில் நதியா:

அதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் மலையாள தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் நதியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். இதை நடிகர் முகேஷ் தான் நடத்தி வருகிறார். அப்போது நிகழ்ச்சியில் முகேஷ் குறித்து நதியா கூறி இருந்தது, 1986 ஆம் ஆண்டு சாமா என்ற படத்தில் தான் முகேஷை சந்தித்தேன். இந்த படத்தில் நான் முகேஷ் உடன் சேர்ந்து நடித்தேன்.

-விளம்பரம்-

முகேஷ் குறித்து சொன்னது:

முகேஷ் சிரிக்காமல் ஜோக் அடிப்பதில் வல்லவர். ஷூட்டிங்கில் சில நாட்களிலேயே நான் முகேஷின் நகைச்சுவைக்கு ரசிகை ஆகிவிட்டேன். சூட்டிங்கு வந்தாலே போதும் முகேஷ் எங்கே என்று அவருடன் போய் சேர்ந்து கொள்வேன். இதனாலே மற்றவர்களுக்கு முகேஷ் மீது கடுப்பு. மேலும், வழக்கம் போல் முகேஷ் அடித்த ஜோக் கேட்டு நான் சிரித்துக் கொண்டிருந்தேன். பின் யூ ஆர் குட் ஜோக்கர் என்று நான் சொன்னேன். இதை கேட்டு அருகில் இருந்தவர்கள் எல்லோருமே சிரித்தார்கள். ஆனால், முகேஷிற்கு முகம் மாறியது.

முகேஷ் சொன்ன வார்த்தை:

அதற்கு பிறகு நான் முகேஷை பார்க்கும் போதெல்லாம் ஜோக்கர் என்று சொல்லி வெறுப்பேற்றி இருந்தேன். ஒரு நாள் முகேஷ், என்னை அழைத்து ஜோக்கர் என்று கூப்பிட்டால் முத்தம் கொடுத்து விடுவேன் என்று சொன்னார். இதனால் நான் பயந்து கொண்டு அவர் கிட்டவே போகவில்லை. அப்போது முகேஷ், இப்போ ஜோக்கர்னு சொல் என்று வம்பு இழுத்தார். நான் என்னுடைய உதட்டை மூடிக்கொண்டு ஓடி விட்டேன். ஆனால், கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்த பிறகு நான் காரில் ஏறிய பிறகு தலையை வெளியே நீட்டி ஜோக்கர் என்று முகேஷ் பார்த்து கத்துவிட்டு போனேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement