ஆறுதல் கூறி ரஜினி வெளியிட்ட ஆடியோ – கொரோனாவில் இருந்த மீண்ட ரசிகர். ஆடியோ இதோ.

0
492
rajini

தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நடிகர்கள் அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினி மட்டும் என்ன விதிவிலக்கா. மேலும், கடந்த பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார் என்று கூறப்பட்டது. இதனால் பல தரப்பில் இருந்து கண்டனக்குரல்களும், வரவேற்புகளும் வந்துள்ளது. அதோடு ரஜினியின் அனைத்து ரசிகர்களையும் ஒன்றிணைக்க rajinimandram.org என ஒரு இணையதளத்தை துவங்கினார் ரஜினிகாந்த். இதற்கென ஒரு ஆன்ட்ராய்ட் அப்ளிகேசனையும் அறிமுகம் செய்தார்.

ரஜினி அரசியலுக்கு வருவார் என்று பல வருடங்களாக அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், இப்போ வரேன் அப்போ வரேன் என்று ரசிகர்களுக்கு பூச்சாண்டி காட்டி வருகிறார் ரஜினி. இதுமட்டும் இல்லாமல் ரஜினிகாந்த அவர்கள் இன்னும் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். அதன் பிறகு தான் அவர் அரசியலுக்கு வருவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படி ஒரு நிலையில் கொரோனவால் பாதிக்கப்பட்ட ரஜினி ரசிகர் ஒருவர் ட்வீட் ஒன்றை செய்திருந்தார்.

- Advertisement -

அதில், தலைவா என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25K என்ற நிலை உருவாக்கி கொடு.உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம் என்று பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் அந்த ரசிகருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், சிகிச்சை பெற்று வரும் தனது ரசிகரை தைரியமாக இருக்க அறிவுறுத்தியுள்ளார். முரளி விரைவில் மீண்டு வர இறைவனிடம் தான் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ள ரஜினி, குணமடைந்த பிறகு குடும்பத்துடன் தனது வீட்டிற்கு வருமாறும் அந்த ஆடியோவில் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

அந்த ஆடியோ வைரலாக சில மணி நேரத்தில் ரஜினியின் ரசிகர் முரளி மீண்டும் ஒரு ட்வீட் செய்து இருந்தார். அதில், ரஜினிகாந்த் ஆசிர்வாதம் கிடைத்தது, அதிசயம் நடந்தது அற்புதம் நிகழ்ந்தது. கொரோனா நெகடிவ் வந்தது. தலைவர் காவலர்களின் பிரார்த்தனையால் எனது கிட்னி யும் சரி ஆகி மீண்டும் பழைய நிலைக்கு வருவேன். உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement