பிறந்தநாளை இறந்தநாளாக ஆக்கிக்கொண்ட சீரியல் நடிகை – இந்த பிரச்சனை தான் காரணமா?

0
618
- Advertisement -

பிறந்த நாளிலேயே கேரளா நடிகை ரெஞ்சுஷா மேனன் தூக்கில் தொங்கி இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மலையாள சினிமா உலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரெஞ்சுஷா மேனன். இவர் சினிமாவில் மட்டும் இல்லாமல் டிவி தொடர்களிலும் நடித்திருக்கிறார். இவர் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னுடைய கேரியை தொடங்கினார்.

-விளம்பரம்-

பின் ரெஞ்சுஷா மேனன் அவர்கள் `ஸ்த்ரீ’ (பெண்) என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் நடிக்க வந்தார். அதற்கு பிறகு இவர் சிட்டி ஆஃப் காட், மேரிக்குண்டொரு குஞ்ஞாட், லிசம்மயுடே வீடு, பாம்பே மார்ச் 12, தலப்பாவு, வாத்தியார், ஒன்வே டிக்கெட், கார்யஸ்தன், அற்புத தீவு என 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் நிழலாட்டம், மகளுடே அம்மா, பாலாமணி போன்ற சீரியல்களிலும் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

இப்படி இவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக சினிமாவில் நடித்திருக்கிறார். இதற்கிடையில் இவரின் முதல் திருமணம் விவகாரத்தில் முடிந்தது. ஆனால், இவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. அந்த குழந்தை ரெஞ்சுஷாவின் பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறது. பின் இவர் மனோஜ் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஆனால், மனோஜிக்கும் ஏற்கனவே மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மனோஜ் இயக்கும் டிவி சீரியலுக்கு ரெஞ்சுஷா மேனன் தான் தயாரிப்பாளர். அப்படி தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

பின் இருவரும் திருமணம் செய்து கொண்டு கடந்த ஒன்றரை வருடங்களாக ஒன்றாக வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் பகுதியில் வாடகை பிளாட்டில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று ரெஞ்சுஷா மேனனுக்கு பிறந்தநாள். ஷூட்டிங் செட்டில் இவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாட்ட ஏற்பாடுகளை அவருடன் வேலை செய்யும் பிற நடிகர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால், ரெஞ்சுஷா மேனன் சூட்டிங்க்கு செல்லவில்லை. இதை தொடர்ந்து ரெஞ்சுஷா மேனன் உடன் வேலை செய்யும் மற்ற நடிகைகள் ரெஞ்சுஷாவுக்கு போன் செய்து இருக்கின்றார்கள்.

-விளம்பரம்-

ரெஞ்சுஷா மேனன் மரணம்:

அவர் போனை எடுக்கவில்லை. இதை அடுத்து அவருடைய கணவர் மனோஜை போனில் தொடர்பு கொண்டிருந்தார்கள். அவர்சீரியல்ஸ் ஷூட்டிங் காக வெளியே போயிருந்ததாக சொன்னார். அதற்குப் பிறகு செக்யூரிட்டிக்கு போன் செய்து ரெஞ்சுஷாவிடம் பேசுங்கள் என்று அவருடைய கணவர் கூறியிருக்கிறார். அதன் பின் செக்யூரிட்டிக்கு கால் பண்ணி விசாரித்து இருக்கிறார்கள். பின் செக்யூரிட்டி சென்று காலிங் பெல்லை அடித்து இருக்கிறார். ஆனால், ரெஞ்சுஷா மேனன் கதவு திறக்கவில்லை. இதனை அடுத்து ஏணி மூலம் அருகில் உள்ள ஜன்னல் வழியாக மேலே சென்று அவசர வாசலை திறந்து உள்ளே சென்று பார்த்து இருக்கிறார்.

போலீஸ் விசாரணை:

அங்கு ரெஞ்சுஷா மேனன் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்திருக்கிறார். இதை அடுத்து போலீஸாருக்கு தகவல் அளித்து இருக்கிறார்கள். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரெஞ்சுஷா உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறார்கள். பின் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், ரெஞ்சுஷா மேனன் தற்கொலைக்கு காரணம் தான் தெரியவில்லை. சில செய்திகள் அவர் இறக்கும் போது நிதி பிரச்சனையில் அவருக்கு இருந்ததாக கூறுகின்றன. பிறந்த நாளிலேயே நடிகை ரெஞ்சுஷா மேனன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு சக நடிகை, நடிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement