லியோவ தூக்கிட்டு ரிக்‌ஷாக்காரன் போட்டிருக்காங்க – கேலி செய்த ப்ளூ சட்டைக்கு திரையரங்கம் கொடுத்த பதிலடி.

0
287
bluesattaimaran
- Advertisement -

லியோ குறித்து கிண்டலாக ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவுக்கு பிரபல திரையரங்க உரிமையாளர் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும், கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர். இவர் நடிகர்கள் முதல் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் என யாரையும் விட்டுவைக்காமல் விமர்சித்து இருக்கிறார். மேலும், இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. பொதுவாக ஒரு பெரிய ஹீரோவின் படம் வாந்தாலே அதனை டார்கெட் செய்து ஒரு வாரத்தை ஓட்டிவிடுவார் ப்ளூ சட்டை. இப்படி இருக்கும் போது சமீபத்தில் ‘ப்ளூ சட்டை மாறன்’ விஜய்யின் லியோ படத்தை விமர்சனம் செய்துள்ளார். லியோ படத்தை எடுத்துவிட்டு ரிக்சாக்காரன் படத்தை போட்டு இருக்காங்க – கேலி செய்த ப்ளூ சட்டைக்கு திரையரங்கம் கொடுத்த பதிலடி.

- Advertisement -

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்:

அதில் அவர்,‘எத்தன பேர் வந்தாலும் ஹரோ தூக்கி போட்டு அடிக்கிறாரு. ஒரு 1000 பேர் வந்தாலும் அடிக்கிறார். யார் கூட டைலாக் பேசணுமோ அவன மட்டும் விட்டுட்டு மத்த பேர எல்லாம் கொன்னுடுறாரு. ஆனா அவனையும் டைலாக் பேசிட்டு கொன்னுடுறாரு. ஒரு படம் நல்லா இருக்க வேண்டும் என்றால் அந்த படத்தின் வில்லன் கதாபாத்திரங்கள் நன்றாக இருக்க வேண்டும். ஆனால், இந்த படத்தில் அப்படி எதுவும் ஒர்க் ஆகவில்லை. வில்லன்கள் புத்திசாலியாக இருந்தால் பரவாயில்லை. முட்டாப் பயலாக இருக்கிறான், மூடநம்பிக்கை உள்ளவனாக நர பலி கொடுத்துட்டு இருக்கான்.

லியோ படம் குறித்து சொன்னது:

இந்த படத்தை பார்த்துவிட்டு இந்த LCU பாய்ஸ் , ம்,ம்,,,,,முரட்டு பாய்ஸ் என்னலாம் பண்ண போறாங்கன்னு தெரியல. அதிலும் Cameo ரோலில் வரும் கமல் வாய்ஸ் விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்பது போல கதை என்னனு தெரியாம ஒளறிக்கிட்டு இருக்கு. படத்தில் உருப்படியான விஷயம் என்னவென்றால் அந்த ஹைனா வரும் காட்சிகள் இருக்கிறது. அந்த கஷ்டமான விஷயத்தை நன்றாக செய்துவிட்டு கார் சேஸிங் காட்சியை மிகவும் கேவலமாக எடுத்து இருக்கிறார்கள் என்று மோசமாக லியோ படத்தை விமர்சித்து பேசி இருந்தார்கள்.

-விளம்பரம்-

ப்ளூ சட்டை மாறன் பதிவு:

இதற்கு ரசிகர்கள் பலரும் ப்ளூ சட்டை மாறனை வழக்கம் போல் திட்டி தீர்த்து வருகின்றனர். இந்த நிலையில் லியோ படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், சென்னையில் உள்ள உட்லேண்ட்ஸ் சிம்பொனி என்ற தியேட்டரில் லியோ படத்தை நீக்கிவிட்டார்கள். எம்ஜிஆர் நடித்த ரிக்ஷாக்காரன் படம் தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்று விமர்சித்து பதிவிட்டு இருக்கிறார். இதற்கு உட்லேண்ட் தியேட்டர் நிறுவனம் பதில் டீவ்ட் போட்டு இருக்கிறது.

உட்லேண்ட்ஸ் சிம்பொனி பதிவு:

அதில், விஜய்யின் லியோ படம் உட்லேண்ட்ஸ் சிம்பொனியில் எட்டு நாட்கள் ஓடி இருந்தது. it சென்று கொண்டு இருக்கிறது. இந்த தியேட்டர் ஆரம்பித்த 38 வருஷத்தில் அதிக கலெக்ஷன் செய்த படம் லியோ தான். 60 லட்சத்தை தாண்டி இருக்கிறது என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த பதிவு விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. லியோ படம் இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் கோடிக்கணக்கான அளவில் வசூல் செய்து வருகிறது. இன்னும் சில தினங்களில் லியோ படம் ஓடிடியிலும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement