நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் மத்திய அரசும், மாநில அரசும் குழம்பி உள்ளார்கள். கொரோனாவை எதிர்த்து மருத்துவர்கள், காவல்துறை, தூய்மைப் பணியாளர்கள் என பலரும் தங்களுடைய உயிரை பணயம் வைத்துப் போராடி வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவினால் இதுவரை ஆயிரத்துக்கும் மேல் இறந்து உள்ளார்கள். இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மே 3ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார் பிரதமர் மோடி.
மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்று பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாகச் செயல்படுத்தப்படுகிறது. ஊரடங்கு உத்தரவால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும், திரையரங்கள், பொது இடங்கள்,போக்குவரத்து என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பிரபலங்கள் கொரோனா வைரஸ் குறித்து பல விழிப்புணர்வு வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிரந்து வருகிறார்கள்.
இதையும் பாருங்க : ப்ப்பா, இந்த வயசுலையும் இப்படியெல்லாம் போஸ் குடுக்குறீங்களே. நடிகையை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.
பல மாநிலங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இந்த கொரோனாவினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எல்லாம் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமலும், வேலை இன்றி ஒரு வேளை சாப்பாட்டுக்கு அல்லல் படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்று தெரியாமல் மக்கள் அனைவரும் கவலையிலும், சோகத்திலும் உள்ளார்கள். மேலும், கொரோனாவினாலும், உடல்நிலை குறைவாலும் பல பேர் இறந்துள்ளார்கள்.
இறந்தவர்கள் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடியாமலும், இறுதி சடங்கில் உறவினர்கள் கலந்து கொள்ள முடியாமலும் மக்கள் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் பீகாரை சேர்ந்த நபர் ஒருவர் தன் தம்பி இறந்துள்ள தகவல் அறிந்த உடன் ஹரியானாவில் இருந்து பீகாருக்கு சைக்கிளில் சென்று கொண்டு இருக்கிறார். இந்த சம்பவம் நெஞ்சை நெகிழ வைத்துள்ளது. பீகாரை சேர்ந்த நபர் ஒருவர் ஹரியானாவில் புலம்பெயர்ந்து பணிபுரிந்து வருகிறார்.
இதையும் பாருங்க : குஷ்பூவை வேண்டாம் என்று கூறியுள்ள தயாரிப்பாளர் – ஆனால், குஷ்பூவை நடிக்க வைத்து சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர்.
ஊரடங்கு உத்தரவால் தன்னுடைய சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் மாட்டிக் கொண்டு உள்ளார். இந்நிலையில் அவர் உடன் பிறந்த தம்பி இறந்து விட்டதாக தகவல் அந்த நபருக்கு கிடைத்துள்ளது. இதனால் இவர் உடனே ஊருக்கு செல்ல முடிவெடுத்தார். தன்னுடைய சொந்த ஊருக்கு செல்ல அவரிடம் சைக்கிள் மட்டும் தான் இருந்தது. ஹரியானாவில் இருந்து பீகாருக்கு அவர் வீட்டிற்கு செல்ல வேண்டுமென்றால் 1280 கிலோ மீட்டர் தொலைவு செல்ல வேண்டும். அதற்கு அவரிடம் வேற வழி இல்லாமல் தன்னுடைய சைக்கிளை எடுத்துக் கொண்டு பயணத்தைத் தொடங்கினார்.
தற்போது அவர் டெல்லியில் எல்லைப்பகுதியான பரிதாபாத்தில் உள்ளார். இன்னும் அவர் எட்டு முதல் பத்து நாட்கள் சைக்கிளில் பயணித்தால் தான் அவர் தன்னுடைய சொந்த ஊரான பீகாருக்கு செல்ல முடியும். இவர் இந்த சாதனையை செய்து முடிப்பாரா? இவரால் தன்னுடைய தம்பியைப் பார்க்க முடியுமா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கணும். இவரின் இந்த செயலை பார்த்து பலரும் கண் கலங்கி உள்ளார்கள். இதேபோல் உலகம் முழுவதும் பல பேர் பல உறவினர்களை இழந்து கொண்டும், அவர்களுடைய இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாமலும் வேதனையிலும் உள்ளார்கள்.