போஸ்டரயே இந்த மேய் மேய்ராறாரே – இணையத்தில் வைரலாகும் வீடியோ. அதுவும் இது எந்த ஊரில் தெரியுமா ?

0
438
ps
- Advertisement -

பொன்னியின் செல்வன் போஸ்டரில் இருந்த குந்தவை புகைப்படத்தை பார்த்து நபர் ஒருவர் செய்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வித்தியாசமான படைப்புகளின் மூலம் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு கால கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுத்து இருக்கிறார் மணிரத்தினம்.

-விளம்பரம்-

இதனை பல பேர் முயற்சித்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்தினம் சாதித்து காட்டி இருக்கிறார். இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி இருந்தது.

- Advertisement -

பொன்னியின் செல்வன் 2:

இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக கடந்த வாரம் தான் வெளியாகி இருக்கிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் எனும் என பலரும் பாராட்டி வந்தார்கள். அதோடு பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குந்தவை குறித்த விவரம்:

மேலும், இந்த படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் திரிஷா மிரட்டி இருந்தார். முதல் பாகத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பேசப்பட்டு இருந்தது. ஆனால், இரண்டாம் பாகத்தில் திரிஷா பெரிய அளவில் ஸ்கோர் செய்யவில்லை. இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் நீங்காத இளவரசியாக திரிஷா இடம் பிடித்திருக்கிறார். அதோடு பொன்னியின் செல்வன் முதல் பாகம் வந்த போது பிரபலங்கள் ரசிகர்கள் என பலருமே குந்தவையின் கெட்டபில் போட்டோ சூட் எல்லாம் நடத்தி சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக்கி இருந்தார்கள்.

-விளம்பரம்-

சங்கராபுரத்தில் நடந்த சம்பவம் :

இந்நிலையில் போஸ்டரில் உள்ள குந்தவை புகைப்படத்தை பார்த்து நபர் ஒருவர் செய்திருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சங்கராபுரத்தில் உள்ள nvn தியேட்டரில் பொன்னியின் செல்வன் 2 பட போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. காவி உடை அணிந்து சாமியார் போல் தோற்றம் அளித்திருக்கும் நபர் ஒருவர் இந்த போஸ்டரில் குந்தவை புகைப்படத்தை பார்த்து முத்தமிட்டு இருக்கிறார். பின் மேலும் கீழும் குந்தவையை முத்தமிட்டு போஸ்டரோடு ஒட்டி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார்கள். இதை பார்த்த பலருமே குந்தவை பைத்தியம் முற்றிவிட்டது, இப்படியெல்லாமா பண்ணுவது? உங்க அட்டகாசத்திற்கு அளவே இல்லையா? என்று விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement