பட ரிலீசுக்கு இரண்டு நாள் முன்பு பாடல்கள் அனைத்தையும் டெலீட் செய்த சவுண்ட் எஞ்ஜினியர் – பின் ரஹ்மான் செய்தது என்ன ?

0
1334
- Advertisement -

இசைப்பயல் ஏ ஆர் ரஹ்மான் திரையுலகில் அறிமுகமாகி இன்றோடு 31 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ரோஜா படத்தின் மூலம் தான் ஏ ஆர் ரகுமான் அவர்கள் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். ரோஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது படக் குழுவினர் உட்பட சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது இயக்குனர் இமயம் கே பாலசந்தர் அவர்கள் ஏ ஆர் ரகுமானை திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்து இருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, ஒரு மிக அற்புதமான இசை கலைஞரை மணிரத்தினம் கண்டுபிடித்திருக்கிறார். இத்தனை நாள் இவர் எங்கு இருந்தார்? என்று தெரியவில்லை. யார் கண்ணுக்கும் சிக்கவில்லை?

-விளம்பரம்-

இவர் மணிரத்தினம் கண்ணிற்கு மட்டும் சிக்கி இருக்கிறார்? இவர் 50- 60 வயது உடைய, ஆறு மாதமாக வளர்ந்து இருப்பவர் என்று கூறி ஏ ஆர் ரகுமானை அழைத்திருக்கிறார். அப்போது ஏ ஆர் ரகுமான் இளம் வயதில் இருந்தார். இந்த இளம் வயதில் இசையில் புலமை பெற்று இருக்கிறார் என்று ஏ ஆர் ரகுமானை பாராட்டி இருந்தார். அதே போல ரோஜா படத்தின் முதல் ரெக்கார்டிங்கின் வீடியோவும் கிடைக்கப்பெற்று இருக்கிறது. அதில் அவருடன் ஒரு சிறுவனும் இருக்கிறார். அது வேறு யாரும் இல்லை ரஹ்மானின் அக்கா மகன் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் தான்.

- Advertisement -

ஏ ஆர் ரகுமான் நிஜத்தில் எவ்வளவு கூலான நபர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரின் இந்த தன்மை இப்போது வரவில்லை ஆரம்பம் காலம் முதலே ஏ ஆர் ரகுமான் எந்த தருணத்திலும் உணர்ச்சிவசப்படாமல் மிகவும் கூலாகவே இருந்திருக்கிறார். அதற்கு உதாரணமாக காதலன் படத்தின் போது நடந்த ஒரு சம்பவத்தை கூறலாம். ரோஜா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பின்னர் ஏ ஆர் ரகுமானுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது.

அந்த வகையில் ஷங்கர் தான் இயக்கிய முதல் படமான ஜென்டில்மேன் படத்தில் ஏ ஆர் ரகுமானை இசையமைப்பாளராக கமிட் செய்தார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து தன்னுடைய அடுத்த படமான காதலன் படத்திற்கும் ஏ ஆர் ரகுமானையே இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருந்தார் சங்கர். மேலும், சொன்ன தேதி கொள்ளாகவே இந்த படத்தின் பாடல்களை முடித்து இருந்தார் ஏ ஆர் ரகுமான்.

-விளம்பரம்-

ஆனால், படம் வெளியாக இரண்டு நாட்களே இருந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும்டெலீட் ஆகி இருக்கிறது. இது குறித்து அந்த படத்தில் புல்லாங்குழல் வாசித்த நவீன் குமார் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். இது குறித்து கூறிய அவர் ‘காதலன் படத்தின் ரெக்கார்டிங் நாங்கள் ஒரே இரவில் முடித்தோம். அதற்கு பின்னால் ஒரு சுவாரசியமான சம்பவம் இருக்கிறது. அந்த படம் வெளியாக இரண்டு நாட்களே இருந்த நிலையில் படத்தின் பாடல்களை எல்லாம் முடித்து தயாராக வைத்திருந்தார் ஏ ஆர் ரகுமான்.

மேலும், வெளியில் டிஸ்ட்ரிபியூட்டர்கள் எல்லாம் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ரகுமான் பாடலை கொடுத்து விட்டால் உடனே லேபிற்க்கு அனுப்பி வைத்து படத்தை ரிலீஸ்க்கு தயார் செய்ய மும்மரமாக இருந்தார்கள். அப்போதுதான் அந்த படத்தின் சவுண்ட் இன்ஜினியரான ஸ்ரீதர் பொறுமையாக வந்தார். அவர் வேலையில் அமர்ந்த போது ஏதோ ஒரு பட்டனை அழுத்த போய் படத்தின் பாடல்கள் எல்லாம் அப்படியே டெலிட் ஆகிவிட்டது.

எங்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. இதுவே ரஹ்மான் இடத்தில் வேறு யாராவது இருந்து இருந்தால் ஸ்ரீதரை கண்ட மேனிக்கு திட்டி இருப்பார்கள். ஆனால், ஒரு ஜென்டில் மேன், அவர் ஸ்ரீதர் மீது துளியும் கோபப்படவில்லை,கத்தவில்லை, அவரை திட்டவில்லை. மாறாக அந்த இடத்தில் இருந்து அப்படியே அமைதியாக சென்றுவிட்டார். எங்களுக்கெல்லாம் ஒரு பதட்டம், என்னடா இது இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கிறது இப்படி ஆகிவிட்டதே இவரும் அமைதியாக சென்றுவிட்டார் என்று.

பின்னர் ஏ ஆர் ரகுமான் சிறிது நேரம் பிரார்த்தனை செய்துவிட்டு மீண்டும் வந்து எங்களையெல்லாம் அழைத்து மீண்டும் ரெக்கார்டிங்கை துவங்கினர். நாங்களும் எங்களுக்கு நினைவில் இருந்ததை எல்லாம் வாசித்தோம் அப்படியே அந்த ஒரே இரவில் படத்தின் அனைத்து பாடல்களையும் ரெக்கார்ட் செய்து முடித்துவிட்டார் ஏ ஆர் ரகுமான் என்று கூறியிருக்கிறார்.

Advertisement