சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரக்ஷிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகி இருந்தார். இதனை தொடர்ந்து இவர் இளவரசி, சரவணன் மீனாட்சி, நாச்சியாபுரம், நாம் இருவர் நமக்கு இருவர் 2, இது சொல்ல மறந்த கதை போன்ற பல சீரியல்கள் நடித்திருந்தார். இதனால் இவர் சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். மேலும், இவர் சீரியலில் மட்டுமில்லாமல் சில படங்களிலும் நடித்திருக்கிறார். அதன் பின் ரக்ஷிதா பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.
இவர் டைட்டில் வின்னர் ஆவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அது நடக்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் வேறு எந்த தொடரிலும் கமிட் ஆகவில்லை. படங்களில் ரக்ஷிதா கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் ‘ஃபயர்’ என்னும் படத்தில் நடித்திருந்தார். தயாரிப்பாளரும் நடிகருமான ஜே.சதீஷ்குமார் இயக்குனராக இந்த படத்தில் அறிமுகம் ஆகி இருக்கிறார். இதில் பாலாஜி முருகதாஸ், ரக்ஷிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், தமிழரசன், சுரேஷ் சக்கரவர்த்தி, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்து இருந்தார்கள். ஜே.எஸ்.கே பிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, டி.கே இசையமைத்து இருந்தார்.
ஃபயர் படம்:
இத்திரைப்படம் நான்கு பெண்களைப் பற்றிய கதை என்று கூறப்படுகிறது. இப்படத்தை தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. இதை ஒரு விழிப்புணர்வு படமாக எடுத்துக் கொள்ளலாம் என்று இயக்குனர் ஜே.சதீஷ்குமார் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார். அதன் பின் இந்த படத்தில் இடம்பெற்ற ‘மெது மெதுவாய்’ என்ற பாடல் வெளியாகியிருந்தது. இது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வைரலாகி இருக்கிறது. இந்த பாடலில் ரக்ஷிதா ரொம்ப கிளாமராக நடித்திருந்தார்.
தற்போது சோசியல் மீடியாவில் இது தான் பேசும் பொருளாகி இருக்கிறது. ரக்ஷிதாவை ரொம்ப மோசமாக என்றெல்லாம் விமர்சித்து இருக்கிறார்கள்.
மெது மெதுவாய் பாடல் சர்ச்சை:
இந்நிலையில் இது தொடர்பாக மெது மெதுவாய் பாடல் உடைய நடன இயக்குனர் மானஸ் அளித்த பேட்டியில், ஃபயர் படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள். இரண்டுக்குமே நான்தான் கொரியோ பண்ணி இருக்கிறேன். ஒரு பாட்டு கல்யாண பாடல். இன்னொரு பாட்டு தான் மெது மெதுவாய். இந்த பாடல் வெளியான முதலே சினிமா ஏரியாவில் ஒரே டாக்காக போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், சிலர் வேணும் என்று கிளாமரா எடுத்துருக்காங்க, நெகட்டிவ் பப்ளிசிட்டிக்காக இப்படி எடுத்துருக்காங்க என்றெல்லாம் கண்ட மேனிக்கு கமெண்ட் போட்டு வருகிறார்கள். ரக்ஷிதா குறித்து நிறைய விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் பார்க்க முடிகிறது. இப்படி இறங்கிட்டாங்களே என்றெல்லாம் அவர்களை பற்றி ரொம்ப மோசமாக சொல்கிறார்கள். அது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.
மானஸ் பேட்டி:
இந்த இடத்தில் நான் ஒரு விஷயத்தை தான் சொல்ல விரும்புகிறேன். படத்தின் கதைக்கு தேவையானதாகவும் நியாயப்படுத்தவும் இந்த பாடல் காட்சி வைக்கப்பட்டிருக்கிறது. சொல்லப்போனால் இந்த காட்சி படத்துக்கு ரொம்பவே முக்கியமான ஒன்று. பாட்டுக்கு கொரியோ பண்ணினவன் என்ற முறையில் வருகிற விமர்சனங்களை ஒதுக்க முடியவில்லை. அதனால்தான் நான் பேசுகிறேன். சினிமாவில் கிளாமர் பாடல் இடம்பெறுவதெல்லாம் வழக்கமான ஒன்றுதான். படத்தில் பாலா ஒரு டாக்டர். அன்று விடுமுறை தினத்தில் கிளினிக் லீவு. ரிசார்ட்டில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருப்பார். அந்த நேரத்தில் ஒரு எமர்ஜென்சிக்காக அவரை சந்திக்க ரக்ஷிதா வருவார். அப்போது மழையும் பொழிகிறது. அப்போது ரெண்டு பேரும் இருக்கும்போது அந்த சூழலில் பாடல் காட்சி படமானது.
ரக்ஷிதா குறித்து சொன்னது:
ரக்ஷிதா மட்டும் இல்லை இந்த படத்தில் நான்கு ஹீரோயின் இருக்கிறார்கள். மருத்துவரான பாலா ஒவ்வொரு பெண்களையும் ஏமாற்றுவார். அதனால்தான் அப்படிப்பட்ட காட்சிகள் எல்லாம் வைக்கப்படுகிறது. ஆனால், பாடல் வெளியானதுமே ரொம்ப கமெண்டுகள் வந்தது. பாடல் காட்சியை மட்டுமே பார்த்துவிட்டு கமெண்ட் செய்தவர்கள் படத்தை பார்த்தால் திட்ட மாட்டாங்க என்று நம்புகிறேன். ரக்ஷிதாவை சீரியலில் ரொம்ப ஹோம்லி ஆக பார்த்துவிட்டு ரசிகர்கள் இந்த மாதிரி பார்ப்பதற்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது என்று நினைக்கிறேன். இத்தனைக்கும் ரக்ஷிதாவுக்கு டான்ஸ் அவ்வளவாக வரவில்லை. இருந்தாலுமே கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் நல்ல ஒத்துழைப்பு தந்து முடித்தார்கள் என்று கூறியிருக்கிறார்.