சிகிச்சை பலனின்றி லொள்ளு சபா நடிகர் சேசு காலமாகி இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக திகழ்பவர் லொள்ளு சபா சேசு. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் சந்தானம், ரோபோ சங்கர், பாலாஜி போன்ற பல பிரபலங்கள் தமிழ் சினிமா உலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் லொள்ளுசபா நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சேசு. இவர் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தான் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார். அதற்கு பின் இவர் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின் சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் மாறன், சந்தானம், ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்ட லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது.
நடிகர் சேசு திரைப்பயணம்:
அதன் பின் இவர் வீராப்பு, வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், திரௌபதி, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு வடிவேலு நடிப்பில் வெளியாகி இருந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் இவர் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் பூமர் அங்கிள், ராயர் பரம்பரை போன்ற சில படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், இவர் வெள்ளி திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார்.
மருத்துவமனையில் அனுமதி :
இறுதியாக சந்தானம் நடிப்பில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் இவரது காமெடி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ரசிகப்பட்டது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கே இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவரது சிகிச்சைக்கு உதவி கேட்டு காமெடி நடிகர் அமுதவாணன் கூட வீடியோ ஒன்றை நடிகர் இருந்தார்.
சேசு உடல்நிலை குறித்த விவரம்:
மேலும், இவர் விரைவில் குணமடைந்து வர பலரும் வேண்டி இருந்தார்கள். பின் சேஷுவின் உடல் நிலை குறித்து அவரின் மகன் பதிவிட்டு போட்டு இருந்தார். அதில், ‘என் தந்தை உடல் நிலை தேறி வருகிறது. மருந்துகளும் நன்றாக வேலை செய்கிறது. மருத்துவர்களும், அவர் இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டு இருக்கிறார். விரைவில் நலமுடன் திரும்புவார் என்று கூறி இருக்கின்றனர். உங்கள் அன்பிற்கு மிகவும் நன்றி என்று கூறி இருந்தார்.
சேசு மரணம்:
இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதியடைந்து இருந்தார்கள். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகர் சேசு நேற்று காலமானார். அவரது இறப்பிற்கு பல்வேறு பிரபலங்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் லொள்ளு சபா சாமிநாதன், மனோகர், மாறன், ஜீவா உள்ளிட்ட பலர் நேரில் சென்று தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சாமி நாதன் ‘இது எங்கள் டீமின் மிகப்பெரிய இழப்பு’ என்று கூறியுள்ளார்.