அஜித், விஜய்யை வைத்து இயக்க இருக்கும் மணிரத்தினம்.! அவரே கூறிய சூப்பர் தகவல்.!

0
527
vijay

தமிழ் சினிமாவில் மல்டி ஸ்டார்களை வைத்து ஹிட் படத்தை கொடுக்க முடியும் என்றால் அது இயக்குனர் மணி ரத்தினத்தால் மட்டுமே முடியும். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “செக்க சிவந்த வானம் ” எனும் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடைந்துள்ளது.

sarkar

மணிரத்னம் இதுவரை ரஜினி, கமல், விக்ரம், சூர்யா, மாதவன் என்று பலரையும் வைத்து படத்தை இயக்கிவிட்டார். அவ்வளவு ஏன் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திகை வைத்தும் படத்தை இயக்கிவிட்டார். ஆனால் தமிழ் சினிமாவின் தல தளபதியை வைத்து இதுவரை ஒரு படம் கூட எடுக்கவில்லை என்பது ஒரு பெரிய குறையாக இருந்து வருகிறது.

ஆனால், தற்போது இந்த கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. சமீபத்தில் வெளியான “செக்க சிவந்த வானம்” படத்தில் இயக்குனர் மணிரத்னதுடன் கதை, திரைக்கதை அமைப்பதற்கு உதவியாளராக இருந்து வந்தவர் இயக்குனரும், எழுத்தாளருமான சிவா ஆனந்த். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சிவா ஆனந்த்திடம், இயக்குனர் மணிரத்னம் எப்போதும் விஜய் அஜித்தை வைத்து படம் இயக்குவார் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

thalaajith

அதற்கு பதிலளித்துள்ள சிவா ஆனந்த், கண்டிப்பாக விஜய் மற்றும் அஜித்துடன் இயக்குனர் மணி ரத்னம் பணியாற்றுவர். அதற்கான கதையும் உருவாகி வருகிறது. விஜய் மற்றும் அஜித் இருவரும் தற்போது பிஸியாக இருந்து வருகின்றனர். அவர்களது கால் சீட் கிடைத்தால் உடனே படத்தை துவங்கிவிடாலாம் என்று கூறியுள்ளார்.