இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ரொமான்டிக் படமான ‘அலைபாயுதே’ படம் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் கதையின் நாயகனாக பிரபல நடிகர் மாதவன் நடித்திருந்தார். மாதவனுக்கு ஜோடியாக ஷாலினி நடித்து இருந்தார். இவர்கள் இருவரின் டூயட் வேற லெவல். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. ஏப்ரல் 14-ஆம் தேதியோடு இப்படம் வெளிவந்து 20 ஆண்டுகள் ஆகி விட்டது. இது குறித்து ட்விட்டரில் அலைபாயுதே என்ற ஹேஷ் டேக் போட்டு ட்ரெண்ட்டிங்க் செய்யப்பட்டது.
இந்நிலையில் அலைபாயுதே படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இயக்குனர் மணிரத்னம் தனது மனைவி சுஹாசினியின் சமூக வலைத்தளத்தின் வாயிலாக ரசிகர்களுடன் ‘லைவ்’வாக கலந்துரையாடினார். சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக இந்தக் கலந்துரையாடல் இருந்தது. இந்தக் கலந்துரையாடலில் பலர் கேட்ட கேள்விகளுக்கு மிகவும் நிதானமாகவும் தெளிவாகவும் பதிலளித்தார் இயக்குனர் மணிரத்னம்.
இதையும் பாருங்க : நயன்தாராவை எங்கு பார்த்தாலும் அறைந்துவிடுவேன். பிரபு தேவா மனைவியின் கோபமான பேட்டி.
இந்த கலந்துரையாடலின் போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு நடிக்க விருப்பம் இல்லையா? உங்கள் நண்பர்கள் யாரும் உங்களை நடிக்க அழைக்கவில்லையா? என்று கேட்டு உள்ளார்கள். அதற்கு மணிரத்தினம் பதில் அளிப்பதற்கு முன்பே நடிகை குஷ்பு அவர்கள் நேரலையில் வந்து பதில் அளித்தார். அதில் குஷ்பு அவர்கள் கூறியது, “வேண்டாம்”, “வேண்டாம்” என்று திரும்ப திரும்ப தெரிவித்து இருந்தார். உடனே இதை பார்த்த மணிரத்னம் அவர்கள் கூறியது,
“பார்த்தீர்களா, நீங்கள் இப்படி அதிர்ச்சி ஆக வேண்டாம்” என்று தான் நான் நடிக்கவில்லை என்று கூலாக பதில் அளித்தார். இதை தொடர்ந்து நடிகை குஷ்பு கூறியது, நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. ஏற்கனவே உங்களுடைய படங்களைப் பார்த்ததனால் தான் எங்களுக்குத் தூக்கமே வருவதில்லை. அதிலும் நீங்கள் நடிக்க ஆரம்பித்தால் அவ்வளவு தான் என்றுகூறினார்.
இவர் இப்படி பேசுவதை கேட்டு இயக்குனர் மணிரத்னம் அதை நகைச்சுவையாக மாற்றி இதனால் தான் நான் நடிக்கவில்லை என்று நையாண்டியாக சொன்னார். மேலும், குஷ்பு தன் இளைய மகளை இயக்குனர் மணிரத்னத்திடம் அறிமுகம் செய்தார். அப்போது குஷ்புவின் மகள் சந்தோஷத்தில் கண் கலங்கினார். உடனடியாக மணிரத்னம், “நான் உங்களை என்ன செய்தேன் ஏன் அழுகுறீர்கள்” என்று வேடிக்கையாக கேட்டார். இப்படி இவர்களுடைய உரையாடல் செம்ம ஜாலியாக போனது.
தற்போது மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கி வருகிறார். மணிரத்னத்தின் கனவு படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா , அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா மோகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்க இருக்கின்றனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன