அவங்கள எல்லாம் மனுஷனாவே மதிக்கறது இல்ல – சீனு ராமசாமி விளக்கத்திற்கு பதிலடி கொடுத்த மனிஷா.

0
540
- Advertisement -

இயக்குனர் சீனி ராமசாமி விவகாரம் குறித்து நடிகை மனிஷா யாதவ் கொடுத்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் சீனு ராமசாமி- மனிஷா யாதவ் பிரச்சனை’தான் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இயக்குனர் சீனு ராமசாமி செய்த டார்ச்சலால் தான் நடிகை மனிஷா யாதவ் சினிமாவிலிருந்து விலகி இருக்கிறார். இவர் தமிழில் ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமாகியிருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்தார். ஆனால், அதற்கு பின்பு சீனு ராமசாமி இயக்கும் படத்தில் கொடுத்த டார்ச்சனால் மனிஷா யாதவ் விலகி விட்டார். பல வருடங்களாக சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகமல் இருக்கும் படம் இடம் பொருள் ஏவல். இந்த படத்தில் மனிஷா முக்கிய கதாபாத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் படபிடிப்பின் போது மனிஷாக்கு சீனு ராமசாமி தொடர்ந்து டார்ச்சர் கொடுத்திருக்கிறார். சொல்லவே முடியாத அளவிற்கு கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

சீனு ராமசாமி-மனிஷா சர்ச்சை:

அதற்கான ஆதாரங்கள் என்னிடமும் இருக்கிறது என்று பிரபல பத்திரிகையாளர் கூறியிருக்கிறார். தற்போது இந்த தகவல் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் இதுகுறித்து சீனு ராமசாமி தன்னுடைய விளக்கத்தை கொடுத்தள்ளார். அதில் அவர், இடம் பொருள் ஏவல் படப்பிடிப்பிற்கு வந்த முதல் நாள் ஏன் முதல் ஷாட்டில் 28 டேக் வாங்கினார் மனிஷா. படப்பிடிப்பு தளத்தில் உதவிட வந்த நடிகையர் வடிவுக்கரசி அவர்களிடம் கோபித்து கடுஞ்சொல் வீசினார் மனிஷா. விஷ்ணு விஷால் ஜோடியாக நடியுங்கள் என நானும் அண்ணாமலை பீலிம்ஸ் கணேஷ் அவர்களும் கேட்ட பொழுது மனிஷா மறுத்தார்.

சீனு ராமசாமி கொடுத்த விளக்கம்:

என் சம்பளத்தில் ஒரு லட்சம் நஷ்ட ஈடாக மனிஷா பெற்றார். மாமனிதன் பெற்ற விருதுகளை பிண அலங்காரம் என வசை பாடியது எனக்கு வலித்தது என்று கூறி இருந்தார். இந்நிலையில் இது குறித்து மனிஷா யாதவ் பேட்டியில் கூறியிருப்பது, சில தினங்களுக்கு முன்பு சீன ராமசாமியின் ஆபீஸ்ல இருந்து எனக்கு தொலைபேசி மூலம் அழைப்பு வந்தது. ஒரு படத்தில் முக்கியமான கதாபாத்திரம் இருப்பதாக சொல்லியிருந்தார்கள். எனக்கும் அது வினோதமாக இருந்தது. காரணம், இத்தனை ஆண்டுகளாக இருவரும் தொடர்பில் இல்லாத நிலையில் ஏன் அவர் எனக்கு போன் செய்ய வேண்டும்? என்று எனக்கு தோன்றியது.

-விளம்பரம்-

மனிஷா அளித்த பேட்டி:

அதோட இடம் பொருள் ஏவல் படப்பிடிப்பின் போது அவர் என்னை நடத்திய விதத்தின் அடிப்படையிலும் அவர் என்னை அப்படத்தில் இருந்து நீக்கியதாலும் இனி அவருடைய படத்தில் நடிக்கவே விருப்பமில்லை. இது எல்லாத்தையும் விட காரணம், நான் அவரிடம் நல்ல விதமாக நடந்து கொள்ளவில்லை என்றும் அவர் செய்த எல்லாவற்றுக்கும் ஒத்துழைக்கவில்லை என்பதால் தான் அந்த படத்தில் இருந்து நீக்கி இருக்கிறார். உடனடியாக எனக்கு பதில் வேரு ஒரு நடிகையை வைத்து நடிக்க வைத்தார்கள். நான் அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமானவர் இல்லை என்று ஒரு இயக்குனர் நினைத்து என்னை நீக்கினால் அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், ஒருவர் எனக்கு எல்லா விதமான குப்பைகளை மெசேஜ் செய்வதை நான் அனுமதிக்கவில்லை. இது என்னை ரொம்பவே அக்சப்ட் செய்தது .

சீனு ராமசாமி குறித்து சொன்னது:

அது குறித்து நான் யாரிடமும் பேசக்கூட விரும்பவில்லை. எனக்கு நடிப்பு வரவில்லை என்று அவர் துறையில் இருக்கும் அனைவரிடமும் கூறிவிட்டார். மேலும், ஒரு குப்பை கதை பட விழா மேடையில் நான் அனைவருக்குமே நன்றி சொன்னதால் அவருக்கும் சேர்த்து நன்றி சொன்னேன். மேடையில் இருக்கும் ஒருவரை விட்டுவிட்டு அடுத்தவருக்கு நன்றி சொல்வது தொழில் தர்மம் இல்லை. நல்ல மனம் கொண்ட பெரிய இயக்குனர்களிடம் நான் பணியாற்றி இருக்கிறேன். திறமையானவர்களாக இருந்தும் உணர்வு இல்லாதவர்களை நான் மனிதர்களாகவே மதிப்பதில்லை. என்னுடைய கணவர், குடும்பத்தினர், நண்பர்கள், இந்த சினிமா துறையில் இருக்கும் என்னுடைய நல விரும்பிகள் என அனைவரின் ஆதரவு எனக்கு இருப்பதால் தான் நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். எந்த ஒரு பெண்ணும் இது போன்ற செயலை மீண்டும் எதிர்கொள்ள மாட்டார் என்று நான் நம்புகிறேன்.

Advertisement